விராட் கோலி தனது நாய் புருனோவின் மறைவு குறித்து இதயப்பூர்வமான குறிப்பை பதிவிட்டுள்ளார்!!
விராட் கோலி, தன்னுடைய செல்லப்பிராணியான புருனோ, 11 வயதில் உயிரிழந்ததை அடுத்து இன்ஸ்டாகிராமில் இதயப்பூர்வமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். “ரெஸ்ட் இன் பீஸ் புருனோ. 11 ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கையை அன்போடு கவர்ந்தது, ஆனால் வாழ்நாளில் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது. இன்று ஒரு சிறந்த இடத்திற்குச் சென்றது. கடவுள் அவனின் ஆன்மாவை அமைதியுடன் ஆசீர்வதிப்பார்,” என விராட் கோலி புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார். அனுஷ்கா ஷர்மாவும் புருனோ மற்றும் விராட் கோலி இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார். “புருனோ RIP,” என்று அனுஷ்கா தலைப்பிட்டார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக தற்போது நாடு தழுவிய ஊரடங்குக்கு இடையே விராட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் வீட்டில் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். செவ்வாயன்று, ஒரு டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு த்ரோபேக் படத்துடன் அணி வீரர் சேதேஸ்வர் புஜாராவை வம்பிருக்கக் கோலி முடிவு செய்தார்.
படத்தில், கோலி இரண்டாவது ஸ்லிப்பில் ஒரு அற்புதமான கேட்சை எடுக்கிறார். அதே நேரத்தில் புஜாரா, முதல் ஸ்லிப்பில், தனது கேப்டனின் புத்திசாலித்தனத்தைக் களத்தில் கவனிக்கிறார். “லாக்டவுக்கு பிறகு முதல் செஷனில் பந்துக்காகச் செல்வீர்கள் என்று நினைக்கிறேன் புஜ்ஜி,” என்று கோலி தலைப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த புஜாரா, “ஆமாம் கேப்டன், நான் என்னுடைய இரண்டு கைகளுடன் பந்தை கேட்ச் பிடிப்பேன்,” என பதில் கொடுத்திருந்தார்.
அண்மையில், கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இருவரும், கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, 2016 ஆம் ஆண்டில் நடந்த போட்டியின் உடைகள் போன்றவற்றை ஏலத்தில் விட்டு நிவாரண நிதி திரட்ட முடிவு செய்தனர். இந்தப் போட்டி RPC அணி, குஜராத் அணியுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதியது.