என்னடா இது விஷ்ணு விஷாலுக்கு வந்த தாங்கமுடியாத வேதனை....

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2018, 05:25 PM IST
என்னடா இது விஷ்ணு விஷாலுக்கு வந்த தாங்கமுடியாத வேதனை.... title=

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்... 

கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதைய தொடர்ந்து, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுபட்டி, ஜீவா, மாவீரன் கிட்டு என பல நடித்து தனக்கென தனி இடத்தை திரையுலகில் உருவாக்கியுள்ளார். 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ரஜினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சில மாதங்களாக இருவருக்கும் இடையே சில மன வருத்தங்கள் நிலவி வந்த நிலையில், இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடினார்கள்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நானும் ரஜினியும் (அவரது மனவைி) கடந்த ஆண்டுகளாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் முறையாக விவாகரத்து பெற்றுக் கொண்டோம். எங்களுக்கு மகன் இருக்கிறான். அவனை சேர்ந்து வளர்ப்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். 

இனியும் நாங்கள் நல்ல நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து வாழ்வோம். எங்களது குழந்தை மற்றும் குடும்பத்திற்காக எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார். 

 

Trending News