தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998-ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
கர்நாடக மாநிலம், பெங்களூவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 1965ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, மஞ்சுநாத்ராய்-ஸ்வர்ணாலதா ஆகியோருக்கு, மகனாக பிறந்தவர் பிரகாஷ் ராய். ஆரம்பத்தில் பெங்களூர் டி.வி., நிகழ்ச்சி மற்றும் நாடகங்களில் பங்கேற்று வந்தவர், சினிமாவுக்காக தனது பெயரை பிரகாஷ் ராஜ் என்று மாற்றிக் கொண்டார்.
இயக்குநர் பாலசந்தரால் டூயட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமும் ஆன பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு ZEE TAMIL வீடியோ ஒன்று வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டு உள்ளது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் #ZeeTamil #HappyBirthdayPrakashRaj #Prakashraj @prakashraaj pic.twitter.com/CI6D8HB3sM
— Zee Tamil (@ZeeTamil) March 26, 2018