Viral Video: நிறம் மாறும் ஹம்மிங் பறவை; பேரழகைக் காண ஒன்றல்ல, கோடி கண்கள் வேண்டும்

ஓசனிச்சிட்டுகள் அல்லது ஹம்மிங் பறவை என்னும் மிகச் சிறிய பறவைகள், சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2022, 03:56 PM IST
  • கண்களை கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ.
  • மனதை கொள்ளும் க்யூட்டான இந்த ஹம்மிங் பறவை தனது வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வீடியோ.
Viral Video: நிறம் மாறும் ஹம்மிங் பறவை; பேரழகைக் காண ஒன்றல்ல, கோடி கண்கள் வேண்டும் title=

இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது.  அதிசயமான கண்கவர் உயிரினங்களால் நிரம்பியுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள். இவை மிக அழகான வண்ணங்களைக் கொண்டவை. இது மட்டுமின்றி பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது அவற்றின் நிறம் மாறுவது போல் தோன்றும். நீங்கள் நம்பவில்லை என்றால், கண்களை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோ மூலம் நிரூபணமாகும்.

ஓசனிச்சிட்டுகள் அல்லது ஹம்மிங் பறவை (Hummingbird) என்னும் மிகச் சிறிய பறவைகள்,  சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இந்த பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மனதை கொள்ளும் க்யூட்டான இந்த ஹம்மிங் பறவை தனது வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹம்மிங் பறவை, வேகமாக சிறகுகளை படபடக்கும் போது,  பல்வேறு அழகான கண்கவர் வண்ணங்களை பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க |  Viral Video: ஆமைக்கு ஆசையாய் ஊட்டி விடும் குரங்கு; இணையவாசிகளை கவர்ந்த க்யூட் வீடியோ

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்

 

 

ட்விட்டரில் வொண்டர் ஆஃப் சயின்ஸ் பகிர்ந்த வீடியோவில், ஹம்மிங் பறவையின் பேரழைக் காணலாம். சிறிய பறவை, ஒரு கட்டைவிரல் அளவு தான் இருக்கும் இந்த பறவை, அதன் தலையைத் திருப்பி, அதன் இறகுகள் கண்ணைக் கவரும் பிங்க், இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு பச்சை நிறம் என மாறுவதைக் காணலாம். பார்க்கும் கோணம் மாறும்போது, ​​நிறங்களும் மாறுவது போல் தோன்றும். ஹம்மிங் பறவையின்  மாறும் வண்ணங்கள், அவற்றின் இறகுகளுக்குள் உள்ள நானோ அளவிலான அமைப்புகளிலிருந்து ஒளி சிதறலால் ஏற்படும் அதிசய தோற்றம் ஆகும். 

மேலும் படிக்க | Viral video: முதன்முதலாக பாதாம் சாப்பிட்ட அணிலின் க்யூட் ரியாக்‌ஷன்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News