வாயில பீர்; கையில துப்பாக்கியுடன் டிஸ்கோ ஆடிய BJP MLA: Watch

பாஜக MLA ஒருவர் உயர் ரக துப்பாக்கிகளோடு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!!

Last Updated : Jul 10, 2019, 02:03 PM IST
வாயில பீர்; கையில துப்பாக்கியுடன் டிஸ்கோ ஆடிய BJP MLA: Watch title=

பாஜக MLA ஒருவர் உயர் ரக துப்பாக்கிகளோடு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!!

உத்தரகாண்ட் மாநிலம் சர்ச்சைக்குரிய பாஜக MLA பிரனாவ் சிங் சாம்பியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டியதால் அந்த கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர், உயர் ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக்கொண்டு கையில் கண்ணாடி கிளாசில் மது அருந்தியபடி நடனமாடுகிறார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையயையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு MLA-விடம் இத்தனை துப்பாக்கிகள் இருப்பது குறித்து பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜார்க்காண்ட் போலீசார் கூறுகையில், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம். அதுமட்டுமல்லாமல் இந்த துப்பாக்கிகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ குறித்து பேசியுள்ள பாஜக ஊடக தொடர்பாளர் அணில் புலானி, "அந்த வீடியோவை நான் பார்த்தேன். இது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பிரணவ் சிங் மீது இது போன்ற புகார்கள் எழுந்தன. அதனால்தான் அவர் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்களுடன் பேசி விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

 

Trending News