இந்த ஆண்டு குளிர் மிகவும் கடுமையாக இருக்க போவதன் காரணம் தெரியுமா..!!!

இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2020, 02:57 PM IST
  • இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
  • லா நினா ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம் என்று தேசிய பெருங்கடல் சேவை மேற்கோளிட்டுள்ளது.
  • பாரிஸ் ஒப்பந்தத்தை மீண்டும் ஆராய வேண்டும் என்று உலகத் தலைவர்களிடையே விவாதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு குளிர் மிகவும் கடுமையாக இருக்க போவதன் காரணம் தெரியுமா..!!! title=

இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையானதாகவும், நீண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இது லா நினாவின் ஆண்டு என்பதால், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வழக்கத்தை அதிக குளிர் நிலவும் என்கின்றனர்.

அதுவும் குறிப்பாக வட இந்தியாவை குளிரில் உறைய வைக்கும் என அவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதிலுமே வெப்பநிலை கடந்த பல ஆண்டுகளை விட குறைவாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வுத் துறையும் (IMD) இதுபோன்ற மதிப்பீடுகளை செய்துள்ளது. தற்போது லா நினாவின் நிலைமை உருவாகி வருகிறது, இதன் காரணமாக, குளிர் அதிகமாக இருக்கும், நீண்ட காலம் நீடிக்கும். 

 லா நினா  (La Nina) என்பது உலகளாவிய காலநிலை அமைப்பின் ஒரு பகுதியாகும். இது ஒரு ஸ்பானிஷ் மொழி வார்த்தை, அதாவது இதற்கு சிறுமி என்று பொருள். கிழக்கு பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தின் மேற்பரப்பில் குறைந்த காற்று அழுத்தம் இருக்கும்போது இந்த நிலைமை எழுகிறது. இதனால் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை கணிசமாகக் குறைகிறது. இதன் நேரடி விளைவாக உலகெங்கிலும் உள்ள வெப்பநிலை சராசரியை விட மிகவும் குளிர் நிலையை ஏற்படுத்துகிறது.

ALSO READ | 15 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்த தாய்... சாத்தியமாக்கியது Facebook..!!!

லா நினா ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம் என்று தேசிய பெருங்கடல் சேவை மேற்கோளிட்டுள்ளது. தற்போது, வடமேற்கில் குளிர்காலத்தில் வெப்பநிலை முன்பை விட குறைவாக உள்ளத. அப்பகுதி மட்டுமல்ல, நாடு முழுவதிலும் குளிர் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இப்போது எல் நினோவையும் புரிந்து கொள்வோம். இது காலநிலை அமைப்பின் ஒரு பகுதியாகும். லா நினாவைப் போலவே, இது வானிலையிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக, மழை, குளிர் காலத்தில் வழக்கத்தை விட அதிகம் குளிராக இருக்கும். 

காலநிலை மாற்றம் காரணமாக, உலகம் முழுவதும் சில ஆண்டுகளில் அதிக குளிர்காலம் மற்றும் சில ஆண்டுகளில் அதிக வெப்பம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது கடந்த சில ஆண்டுகளில் நாம் கடுமையான கோடை காலம் இருந்ததை பார்த்தோம்.  இதேபோல், வெள்ளம் மற்றும் வறட்சி நிலைகளும் அதிகரிக்கப் போகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக உலகம் கட்டுபாடு இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் பாரிஸ் ஒப்பந்தத்தை மீண்டும் ஆராய வேண்டும்  என்று உலகத் தலைவர்களிடையே விவாதிக்கப்படுகிறது.

ALSO READ | Paytm பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கான Good News என்ன தெரியுமா... !!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News