இணையத்தில் மிகவும் பிரபலமான வெள்ளை பிரா அணிந்துள்ள ஆடுகள்

வெள்ளை பிரா அணிந்த இந்த ஆடுகள் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளன. 

Written by - ZEE Bureau | Last Updated : Jan 3, 2020, 06:14 PM IST
இணையத்தில் மிகவும் பிரபலமான வெள்ளை பிரா அணிந்துள்ள ஆடுகள்

புதுடெல்லி: வீட்டில் வளர்க்கப்படும் நிறைய செல்லப்பிராணிகள் ஆடைகளை அணிந்திருப்பதைப் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்தில், ஆடுகளின் ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. காரணம் இந்த ஆடுகள் வெள்ளை ப்ரா அணிந்திருப்பதை புகைப்படத்தில் காணலாம். இந்த புகைப்படத்தை பிராங்க்ளின் வெட்ஸ் லைஃப்ஸ்டைல் ஃபார்ம்ஸ் (Franklin Vets Lifestyle Farms) என்ற பயனர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்ட பேஸ்புக் பயனர், "ரோஸ்" மூன்று குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்தது. பால் சுரக்கும் பகுதியில் சஸ்பென்சரி தசைநார்கள் சேதமாகின. இதன் மூலம், அது அதிகமாக தொங்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நாங்கள் ஒரு திட்டத்தை தயார் செய்தோம். ஒரு பெரிய பிராவைப் பயன்படுத்தலாம் என்று, தற்போது அதுக்கு பிரா அணிவிக்கப்பட்டு உள்ளது. இது ஆட்டுக்கு ஆறுதல் அளிக்கிறது. "ரோஸ்" 3 அழகான ஆட்டுக்குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் இந்த நேரத்தில் ரோஸ் (செம்மறி ஆடு) மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பேஸ்புக் பயனர் கூறியுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

More Stories

Trending News