மீன்களுக்கு உணவளிக்கும் சிம்பன்சி: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Chimpanzee Viral Video: இந்த சிம்பன்சி வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை இந்த வீடியோவுக்கு 692k வியூஸ்களும் 37k லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையமே இந்த சிம்பன்சியிடம் மயங்கி விட்டது என்றுதான் கூற வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2022, 03:02 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மீன்களுக்கு உணவளிக்கும் சிம்பன்சி: கொஞ்சித்  தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை பல முறை நிரூபித்துள்ளன. மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் திறனும் இவற்றுக்கு அதிகமாக உள்து. முட்டாள்தனமான மற்றும் அழகான குரங்குகளில் ஒன்றான சிம்பன்சிகள் மனிதர்களைப் போலவே நடந்துகொள்வதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். 

மேலும் படிக்க | கால்பந்துடன் கலக்கும் கேரள தாத்தா: வாவ் என வாய் பிளக்கும் நெட்டிசன்கள் 

பலர் சிம்பன்சிகளை வளர்த்தும் வருகின்றனர். சிலர் அவற்றை குழந்தைகளைப் போல நடத்துவதும் உண்டு. இவை பெரும்பாலும் மனிதர்களைப் போலவே செயல்படுகின்றன.

ஒரு சிம்பன்சி பற்றிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சிம்பன்சி வீடியோ 'Buitengebieden’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் பல வேடிக்கையான விலங்கு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 

இந்த சிம்பன்சி வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை இந்த வீடியோவுக்கு 692k வியூஸ்களும் 37k லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையமே இந்த சிம்பன்சியிடம் மயங்கி விட்டது என்றுதான் கூற வேண்டும். 

வீடியோவில், ஒரு பூங்காவில் உள்ள குளத்தின் அருகே சிம்பன்சி ஒன்று அமர்ந்துகொண்டு மீன்களுக்கு உணவளிப்பதை பார்க்க முடிகின்றது. இது ஒரு பெரிய மிருகக்காட்சி சாலையா அல்லது, இந்த சிம்பன்சி ஒரு செல்லப்பிராணியா, அல்லது பூங்காவில் மீன்களுக்கு உணவளிக்க அது தானாக வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

சிம்பன்சி தன் கையில் சில விதைகளை வைத்துக்கொண்டு அமைதியாக மீன்களுக்கு அவற்றை அளிப்பதை விடியோவில் காண முடிகின்றது. மீன்கள் வேகமாக வந்து அவற்றை பெற்றுக்கொள்கின்றன. சிம்பன்சியும் பாசமாக உணவளிக்கின்றது. இந்த சிம்பன்சியை பாசத்தை பார்த்த இணையவாசிகள் கமெண்ட் பகுதியில் இதை கொஞ்சி வருகின்றனர்.

பாசமாக உணவளிக்கும் சிம்பன்சியின் வைரல் விடியோவை இங்கே காணலாம்: 

மேலும் படிக்க | படிக்க சொன்னா பல்லிய மேல விட்டுடுவேன்: குறும்புக்கார குழந்தையின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News