பண மழை கொட்டும்: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்

Rahu Transit, Impact On Zodiac Signs: ராகுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2023, 09:41 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகு பெயர்ச்சி ஆவதால் அதிக பலன்கள் கிடைக்கும்.
  • இந்த பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இதன் காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள்.
பண மழை கொட்டும்: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும் title=

ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: இந்த ஆண்டின் இறுதிக்குள், பல முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவானும் குரு பகவானும் பெயர்ச்சி ஆகி விட்டனர். அதே சமயம், இப்போது ராகுவின் ராசி மாறும் நேரம் நெருங்கி வருகிறது. ஜோதிடத்தில், ராகுவிற்கு பாவ கிரகம், மழுப்பல் மற்றும் நிழல் கிரகம் என்ற பெயர்கள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அசுபமான நிலையில் இருந்தால், அவருக்கு ஒரு குழப்ப நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக அவர் பல தவறான சேர்க்கையில் சேர்ந்து தவறான செயல்களை செய்கிறார். பொதுவாகவே சனியை போல, ராகு, கேது கிரகங்களின் பெயரை கேட்டாலும் மக்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், அப்படி அச்சப்பட அவசியமில்லை. இந்த கிரகங்கள் மக்களுக்கு பல வித நல்ல பலன்களையும் அளிக்கின்றன. 

ராகு கிரகம்

ராகு கேது ஆகிய இரு கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கின்றன. இவை நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன.  ராகு எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை. ஒருவரது ஜாதகத்தில் ராகு வலுப்பெற்ற நிலையில் இருந்தால், அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். ராகு நல்ல நிலையில் இருக்கும் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிகப்படியான வெற்றியை பெறுகிறார்கள். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றது. 

ராகு பெயர்ச்சி

ராகு அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளது. மீன ராசியில் ராகுவின் பிரவேசம் வக்ர இயக்கத்தில் அதாவது தலைகீழ் இயக்கத்தின் மூலம் இருக்கும். ராகுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது. இவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த  நற்செய்தி இப்போது கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 

மேலும் படிக்க | ராசிபலன்: இன்று இந்த ராசிக்கு பணப் பரிசு காத்திருக்கிறது!

மீன ராசி

2023 அக்டோபரில் ராகு மீன ராசியில் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாக பொருளாதார நிலை மிகவும் மேம்படும். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், இந்த நேரத்தில், அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். எதிர்பாராத இடங்கலிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் ராகு பெயர்ச்சி ஆவதால் அதிக பலன்கள் கிடைக்கும். இந்த பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள். இந்த பெர்ச்சியினால், அவர்களின் நிதி நிலைமை ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவாக இருக்கும். இத்துடன், இந்த பெயர்ச்சி அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், அதனால் மரியாதை கூடும்.

கடக ராசி

ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் ராகு சஞ்சாரத்தால் பல சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது வெற்றிகரமாக நிறைவேறும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் தற்போது உருவாகும். உங்கள் கனவை நிறைவேற்ற ராகு பெயர்ச்சி உங்களுக்கு உதவியாக இருக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... ஹனுமன் இருக்க பயமேன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News