ராகு நிழல் கிரகம் என்றாலும், அவர் நவகிரகங்களில் முக்கியமானவர். தவறு செய்வதற்கு தூண்டுதலைத் தருபவர் என்றும் சொல்வார்கள். இதன் பின்னணியும், பரிகாரம் என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம். பாற்க்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அமிர்தம் உருவவானது. யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சனையில் விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்து அமிர்தத்தை கொடுத்தார்.
தேவர்களுக்கு அமிர்தம் வழங்கும்போது கஸ்யப மஹரிஷியின் மகனான ஸ்வர்பானு அமிர்தம் பெற முடியாதோ என்று நினைத்து தேவ வடிவம் பூண்டு அமிர்தத்தை வாங்கி உண்டுவிட்டார். இதனால் கோபமடைந்த மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, அரக்கன் ஸ்வர்பானுவின் தலையில், தன் கையில் இருந்த கரண்டியால் ஓங்கி தட்டிவிட்டார். இதனால் ஸ்வர்பானு, தலையும் முண்டமுமாய் இரண்டு துண்டானார். ஆனால், அமிர்தம் உண்டதால் அமரரான ஸ்வர்பானுவின் தலையும் உடலும் உயிருடனே இருந்தது.
மற்றொரு புறம், விஷ்ணுவின் கோபத்தால் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்திய அசுரர்களும் ஸ்வர்பானுவை தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்த நிலையில், இரண்டு துண்டாக இருந்த ஸ்வர்பானுவுக்கு முழு உடலைக் கொடுக்க எண்ணிய விஷ்ணு பகவான், பாம்பு உடலை ஸ்வர்பானுவின் தலையுடன் பொருத்திவிட்டு, பாம்புத்தலையை ஸ்வர்பானுவின் உடலுடன் பொருத்திவிட்டார்.
மேலும் படிக்க | நவ பஞ்சம யோகம்... அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் சில ராசிகள்
மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவர் கேது எனவும் அழைக்கப்பட்டனர். ஒரே உயிராக இருந்தாலும், இரு உடல்களுடன், நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களாக ராகுவும் கேதுவும் உருவானார்கள். ஓருயிர் ஈருடல் பெற்ற ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நவகிரகங்களில் பாம்புத் தலை கொண்ட ராகு ஆசைகளை ஊருவாக்கி பிரச்சனையைக் கொடுப்பவர். ஜாதகத்தில் ராகுவின் நிலை நன்றாக இருந்தால் அந்த நபர் பணக்காரராக இருப்பார். அதுவே ராகுவின் இடம் மோசமானதாக இருந்தால் ஆரோக்கியத்தை மோசமாக்குவார், கடுமையான நோய்கள் ஏற்படுகின்றன, மருந்துகள் கூட பலனளிக்காது. ஆனால், சுலபமான பரிகாரங்கள் மூலம் ராகுவை சாந்திப்படுத்தலாம்.
ராகு ஒருவருக்கு தீமை செய்பவராக இருந்தால், நோய் ஏதும் இல்லாமலேயே பிரச்சனைகள் இருப்பதாக உடல் காட்டும். அல்லது நோய் இருந்தாலும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகும் அது தெரியவராது. இல்லையென்றால் மருத்துவர் நோயைக் கண்டறிந்து மருந்து கொடுத்தாலும், அது பயனற்றதாகிவிடும் இப்படி நோய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நோய் தொடர்பான கவலைகளை அதிகரிக்கச் செய்வார் ராகு. அதேபோல, ராகு மிகவும் மோசமாக இருந்தால், குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..!
நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ராகு பரிகாரங்கள்
ராகு தோஷம் இருந்தால் வீட்டில் நவகிரக ஹோமம் செய்யலாம்
ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றலாம்
வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உணவு உண்பது ஆகியவை ராகு தோஷத்தால் ஏற்படும் உடல்நலக் குறைவைக் குறைக்கும்.
ருத்ராட்ச ஜெபமாலை அணிந்து சிவபெருமானை வழிபடவும்.
நமசிவய என்ற சிவமந்திரம் மலையையும் மடுவாக்கும் என்றால், தீராத நோய்களையும் போக்கடிக்கும் மாமருந்தாக செயல்படும்.
ராகு தோஷம் இருப்பவர்கள், நீலம், கருப்பு மற்றும் ஊதா நிற ஆடைகளை அணியக்கூடாது.
சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் தொழு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.
வெள்ளி ராகுவுக்கு உகந்த உலோகம். வெள்ளி இருக்கும் இடத்த்ல் ராகுவின் எதிர்மறையான தாக்கம் செயலிழந்துவிடும் என்பதால், வெள்ளி ஆபரணங்களை அணியவும்
துளசி செடிக்கு நீரூற்றவும். துளசி இருக்கும் இடத்தில் உள்ள மண்ணை விபூதி போல நெற்றியில் இடவும்.
ராகு தோஷம், தேவையில்லாத வார்த்தைகளை பேச வைத்து பிறரை எதிரியாக்கும். எனவே, தினமும் காலையில் சிறிது குங்குமப்பூவை நாக்கில் தடவி வந்தால், ராகு தோஷத்தால் ஏற்படும் கடுமையான அல்லது தவறான வார்த்தைகள் பிரயோகம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | புதன் அஸ்தமனம் ... வேலையில், தொழிலில் சிக்கல்களை எதிர்கொள்ளும் 6 ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ