மிதுன ராசிக்கு பாயும் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், ராஜ வாழ்க்கை

Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின் படி, செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடலாம்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 14, 2024, 04:00 PM IST
  • முதலீடு மூலம் அதீத லாபத்தை பெறுவீர்கள்.
  • வெளிநாட்டில் படிக்கும் விருப்பம் நிறைவேறும்.
  • தொழிலால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மிதுன ராசிக்கு பாயும் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு தொழில் முன்னேற்றம், ராஜ வாழ்க்கை title=

Mars Transit 2024 in Gemini: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், அதேசமயம் சில ராசிக்காரர்களுக்கு தீய பலனையும் தரக்கக்கூடும். அந்த வகையில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். செவ்வாய் கிரகத்தின் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும். ஆனால் இந்த ராசி மாற்றம் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்கள் செல்வ செழிப்பையும், சொத்துக்களை பெறலாம். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

கடகம் (Cancer Zodiac Sign): செவ்வாய் கிரகத்தின் (Mars Transit 2024) இந்த பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் கடக ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தான வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பைக் காணலாம். புதிய வருமானம் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். பணம் சம்பாதிக்க பல சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் பணத்தை சேமிக்க முடியும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். முதலீடு மூலம் அதீத லாபத்தை பெறுவீர்கள். துணிச்சல் அதிகரிக்கும். மேலும் பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | Saturn Transit: சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!

சிம்மம் (Leo Zodiac Sign): செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையலாம். இந்த பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மங்களகரமான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில், புத்திசாலித்தனம் வளரும் மற்றும் இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் மத அல்லது சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். வெளிநாட்டில் படிக்கும் விருப்பம் நிறைவேறும்.

மகரம் (Capricorn Zodiac Sign): செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் பொருள் இன்பங்களைப் பெறலாம். வாகனம், சொத்துக்களால் பலன் கிடைக்கலாம். இன்பம் பெருகும். அதே சமயம், தொழில் முன்னேற்றம் மற்றும் சம்பள உயர்வுக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், தொழிலால் நல்ல லாபத்தைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Jagannath Rath Yatra: கடவுளின் கஜானாவை திறக்க பாம்பு பிடிப்பவர் ஏன்? 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பூரி ஜெகந்நாதர் கருவூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News