கடன் வாங்கியே வாழ்க்கை முழுவதும் பிழைக்க வேண்டும் என்ற சூழலில் தான் கோடிக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இருக்கின்றன. நல்லது கெட்டது என எந்தவொரு நிகழ்வுக்கும் போதிய வருமானம் இல்லாமையால் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை கடனில் இருந்து விடுவித்துக் கொள்ள நினைத்தால் அல்லது கடனை சீக்கிரம் கட்ட வேண்டும் என்று நினைத்தால் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி குறிப்பிட்ட நட்சத்திரம் இருக்கும் நாளில் கடன் வாங்குவதை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் வட்டி கட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அந்தக் கடன் ஒரு கட்டத்தில் தீர்க்க முடியாத நிலைக்கு வந்து நிற்கும். அப்படியான சூழ்நிலை உங்களுக்கு வந்துவிடக்கூடாது என நீங்கள் நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போது கடன் வாங்க கூடாது?
அஸ்த நட்சத்திரம் இருக்கும் நாளில் கடன் வாங்காதீர்கள். ஜோதிட சாஸ்திர நம்பிக்கைகளின்படி இந்த நட்சத்திரம் இருக்கும் நாள் மற்றும் நேரத்தில் கடன் வாங்கினால் அது இரட்டிப்பாகிக் கொண்டே செல்லும். இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால், கடன் வாங்க செல்லும் முன்பு உங்களின் காலண்டரில் நேரம் மற்றும் நட்சத்திரத்தை பார்த்து செல்லுங்கள். இதில் விதிவிலக்கு என்னவென்றால் திடீர் மருத்துவம் மற்றும் பயண செலவு உள்ளிட்டவை இருக்கின்றன. அதற்கு நேரம் காலம் அவசியமில்லை.
கடன் தீர வழிபாடு
கடன் பிரச்சனை நிரந்தரமாக தீர்ந்து நீங்களும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என நினைத்தால் 16 செவ்வாய்க்கிழை விநாயகர் முன்பு இந்த பரிகாரத்தை செய்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஒரு சிறிய கப்பில் சர்க்கரை, பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து விநாயகர் முன்பு வைத்து வழிபடுங்கள். பின்னர் அதனை எறும்பு புற்றுகளுக்கு தானமாக வைத்துவிடுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமையில் 16 வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளும்பட்சத்தில் உங்களின் கடன் சுமை நிச்சயம் குறையும். சாஸ்திர நம்பிக்கை உள்ளவர்கள் இதனை முயற்சித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ