சுக்கிர தசை: சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்

Venus Retrograde: சில ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இந்த நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 8, 2023, 12:38 PM IST
  • சுக்கிரன் கடக ராசியில்தான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
  • கடக ராசிக்காரர்கள் சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
  • இவர்களின் திட்டங்கள் வெற்றியடைய ஆரம்பிக்கும்.
சுக்கிர தசை: சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும் title=

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் அசுரர்களின் கிரகமாக கருதப்படுகிறார். மேலும், சுக்கிரன் கிரகம் செல்வம், பெருமை, ஆடம்பரம், ஆடம்பர வாழ்க்கை, உலக இன்பம், அன்பு மற்றும் அழகு ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். எனவே, சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கின்றன. சுக்கிரன் சில மாதங்கள் வக்ர இயக்கத்தில், அதாவது எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்தார். சமீபத்தில், செப்டம்பர் 4, 2023 முதல், சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதாவது அவரது இயக்கம் நேராக மாறியுள்ளது.

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், அஸ்தமன, உதய நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்து மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சுக்கிரனின் வக்ர நிவர்த்தியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இந்த நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடந்து முடியும். இவர்களின் பொருளாதார நிலை மேம்படும், வாழ்வில் மகிழ்ச்சியும் வசதிகளும் பெருகும். சுக்கிரன் பெயர்ச்சியால் அபரிமிதமான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரனுன் வக்ர நிவர்த்தியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் இவைதான்: 

கடக ராசி

சுக்கிரன் கடக ராசியில்தான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். கடக ராசிக்காரர்கள் சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் பல நன்மைகளைப் பெறுவார்கள். இவர்களின் திட்டங்கள் வெற்றியடைய ஆரம்பிக்கும். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். தொடர்புகள் அதிகரிக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். உங்கள் வருமானம் கூடும், இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமை சேரும். உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | உச்ச ராஜயோகம், அதிர்ஷ்டம்.. குருவால் குபேர வாழ்க்கை பெறப்போகும் ராசிகள்

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர நிவர்த்தி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இந்த ராசிக்காரர்களின் தைரியமும் துணிவும் இன்னும் அதிகமாகும். இந்த காலத்தில் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். இவை அனைத்தும் சரியான முடிவுகளாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது இவர்களுக்கு கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து சம்பாதிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் / மனைவி இடையே உறவு வலுவடையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். இந்த நேரத்தில் பழைய முதலீடுகள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், சொத்து அல்லது நிலச் சொத்து தொடர்பான வியாபாரம் உங்களுக்கு நன்மை தரும்.

 

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு சுக்கிரனின் வக்ர நிவர்த்தி வருமான வகையில் பெரும் பலன்களைத் தரும். உங்கள் வருமான அதிகரிப்பு உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும். சிக்கிய பணத்தை நீங்கள் இப்போது பெறலாம். தொழிலதிபர்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உங்கள் உரையாடல் நடை மேம்படும். மேலும் அதிக மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனுடன் இணைந்து வளத்தையும் செழிப்பையும் வழங்கும் சூரிய பகவான்! புதாதித்ய ராஜயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News