மார்ச் மாத ராசிபலன்: நாளை முதல் கிரகப் பெயர்ச்சி ஆரம்பம், இந்த ராசிகளுக்கு பணம் குவியும், அதிர்ஷ்டம்

March Monthly Horoscope 2024 : மார்ச் மாதம் தொடங்கி ஆறு நாட்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது நாளை முதல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி, உதயம் போன்ற நிகழ்வுகள் நடைப்பெற போகிறது, இதனால் எந்த ராசிகளுக்கு லாபகரமான பலன் கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 6, 2024, 03:24 PM IST
  • இந்த ராசிகளுக்கு பணம் குவியும், அதிர்ஷ்டம்
  • நாளை முதல் கிரகப் பெயர்ச்சி ஆரம்பம்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்.
மார்ச் மாத ராசிபலன்: நாளை முதல் கிரகப் பெயர்ச்சி ஆரம்பம், இந்த ராசிகளுக்கு பணம் குவியும், அதிர்ஷ்டம் title=

மார்ச் மாத ராசிபலன் 2024 : மார்ச் மாதம் தொடங்கி ஆறு நாட்களில் கடந்துள்ள நிலையில் தற்போது நாளை முதல் பல பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. அந்தவகையில் இந்த மாதம் கும்ப ராசியில் சனி உதயம் நிகழப்போகிறது. அதேபோல் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய 4 முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படும். மேலும், இந்த மாதம், சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய், சனி, சூரியன் சேர்க்கை நடக்கப் போகிறது. இதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றத்தால், மார்ச் மாதம் சில ராசிக்காரர்களுக்கு பண பலன், அதிர்ஷ்டம், வெற்றி தேடி வரும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

மார்ச் மாதம் நிகழப்போகும் கிரங்களின் மாற்றம் :
* மார்ச் 7 ஆம் தேதி பஅதாவது நாளை தன் கிரகம் கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
*மார்ச் 7 ஆம் தேதி அதாவது நாளை சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறது.
* மார்ச் 14 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைவார். 
* மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைவார். 
* மார்ச் 18 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாக உள்ளார். 
* மீண்டும் மார்ச் 26 ஆம் தேதி புதன் தனது ராசியை மாற்றி மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
* மார்ச் 31 ஆம் தேதி செல்வம், செழிப்பை அளிக்கும் சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். 

மேலும் படிக்க | வருமானத்தில் எவ்வளவு தொகையை நன்கொடையாக வழங்கலாம்? விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

இந்நிலையில் இந்த கிரகப் பெயர்ச்சியால், உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign) : மேஷ ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியை தரும். நிலுவையில் இருந்த பணிகள் முழுமையாக நிறைவடையும். பொருளாதார நிலை மேம்படும். வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign) : கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். நீதிமன்ற வழக்கில் வெற்றி தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மன அமைதியும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி (Virgo Zodiac Sign) : கன்னி ராசிக்காரர்களுக்கு அதீத பலன் கிடைக்கும். சமூதாயத்தில் அந்தஸ்தும், கௌரவமும் கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுக எதிரிகளிடம் ஜாக்கிரதியாக இருங்கள்.

மகரம் (Capricorn Zodiac Sign) : மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், உடல்நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் உதயமாகும் சனி.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News