கும்ப ராசியில் உதயமாகும் சனி.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்

Saturn Transits, Saturn Rise : நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி செயலில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அதன்படி, சனி உதயமாத்தால் லாபகரமான பலன் பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 6, 2024, 12:19 PM IST
  • பதவி உயர்வு கிடைக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
  • பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வு பெரும்.
கும்ப ராசியில் உதயமாகும் சனி.. இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம் title=

Saturn Transits, Saturn Rise Positive Effect On Zodiac Sign : ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றும் மட்டுமின்றி, அஸ்தமனம், உதயம் போன்ற நிகழ்வுகளும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் சிறு மாற்றங்களும் வாழ்க்கையில் நேரடியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் கடந்த ஆண்டு பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பயணித்து வரும் சனி தற்போது மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார்.

சனி உதயத்தால், அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் சனி உதயமாவதால் லாபகரமான் பலன் கிடைக்கும். மேலும் சனியின் உதயத்தால் சில ராசிக்காரர்களின் கஷ்ட காலம் முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ் வாழ்க்கை, அதிர்ஷ்டம், பண வரவு போன்றவற்றை கிடைக்கும். இந்நிலையில் அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign) : சனி உதயத்தால் மேஷ ராசிக்காரர்கள் சுப பலன் அடைவார்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியில் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் உயரும். சொந்தத் தொழிலை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பண வரவு ஏற்படும். சம்பள உயர்வு பெறலாம். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசி இணைத்து பிரச்சினைகளையும் சரி செய்து கொள்ளவும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சனி சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

கன்னி (Virgo Zodiac Sign) : சனி உதயத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களின் தொழில் சிறப்பாக செயல்படும். பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். செல்வம் குவியும். சனி உதயத்திற்கு பிறகு முழுமையான சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

துலாம் (Libra Zodiac Sign) : சனி உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட பலன் பெறுவீர்கள். பண பலன் உண்டாகும். தொழிலில் முழுமையான திருப்தி கிடைக்கும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் பண லாபம் பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்வு பெரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

தனுசு (Sagittarius Zodiac Sign) : சனியின் உதயத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பொன்னான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தலாம். தொழிலில் நிறைய லாபத்தை பெறலாம். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சனிபகவானின் ஆசி கிடைக்கலாம். சிறப்பான பலன்களை பெறுவீர்கள். பொன்னான வாய்ப்பை பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க | Vijaya Ekadashi 2024: விஜய ஏகாதசி அன்று இந்த 5 பரிகாரங்களைச் செய்தால் மிகவும் நல்லது!

(பொறுப்பு துறப்பு : இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

Trending News