சூரிய பெயர்ச்சி பலன்கள்... சோம்பலை விடுங்க... உலகம் உங்கள் வசமாகும்!

சூரியன் ராசி பரிவர்த்தனை: சூரியன்-புதன் சேர்க்கையினால்  குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் திறமை அதிகரிக்கும். வெற்றிகள் கைகூடும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2023, 04:31 PM IST
  • இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில், சோம்பலை கைவிட்டு, சிறந்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
  • தினமும் காலையில் எழுந்தவுடன் நீராடி சூரியனை வணங்கி வழிபடுங்கள்.
  • திருமணத்திற்கு காத்திருக்குக்கு இளைஞர்களுக்கும் திருமணம் கை கூடும் வாய்ப்பு கிடைக்கும்.
சூரிய பெயர்ச்சி பலன்கள்... சோம்பலை விடுங்க... உலகம் உங்கள் வசமாகும்! title=

ஜோதிடத்தில், கிரகங்கள் அவ்வப்போது ராசி மாறிக்கொண்டே இருக்கும். குறிப்பிட சில காலத்திற்கு அவை பெயர்ச்சி ஆகின்றன. கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராஜாவான சூரிய தேவன் பற்றி பேசினால், அவர் ஜூலை 17 அன்று தனது ராசியை மாற்றியிருந்தார். இந்த நாளில் கடக ராசியில் பிரவேசித்த அவர் ஆகஸ்ட் 17ம் தேதி வரை இங்கு இருப்பார். கடக ராசியில் இருக்கும் இந்த ஒரு மாத காலத்தில் சூரிய பகவான் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம். 

சூரியனின் சஞ்சாரத்தின் பலன் காரணமாக, இந்த ராசியின் இளைஞர்கள் சோம்பலை விட்டு விலக இருந்தால் போதும், வெற்றிகள் கை கூடும் உலகம் உங்கள் வசமாகும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள் . அதே சமயம் முழு பலத்துடன் போட்டிக்குத் தயாரானால் நிச்சயம் வெற்றி கிடைக்கும், பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கலாம்.

ரிஷபம்

சூரியனும் புதனும் இணைவதால் ரிஷப ராசி இளைஞர்களின் திறமை மேம்படும். இது சமூகப் பணிகளில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு, எனவே கடினமாக உழைக்கவும். சோம்பல், கோபம் ஆகியவை உங்கள் வேலையைக் கெடுத்துவிடும். எனவே நீங்கள். சோப்பேறித் தனத்தையும், கோபத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பிலோ அல்லது போட்டியிலோ முழு கவனம் செலுத்தினால், வெற்றி உங்கள் கைவசம் இருக்கும். இளைஞர்கள் தாயுடன் நேரத்தை செலவிட வேண்டும், அவரது வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் கடினமாக உழைக்காமல் பின்வாங்கக் கூடாது. இந்த நேரத்தில், மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், ஈடுபாட்டுடன் முயற்சித்தால் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். சரியான நேரத்தில் பணியை முடிக்க வேண்டும் என்றால், கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். மொபைலில் அதிக நேரம் செலவழிப்பதால் படிப்பு கெட்டுவிடும்.

மேலும் படிக்க | நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் மீது அருள் மழை பொழிவார் சனி பகவான்

மிதுனம்

சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் பேச்சில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.அதனால் குறிப்பாக ஆகஸ்ட் 17ஆம் தேதி அதாவது ஒரு மாதம் இந்த ராசி இளைஞர்கள் மிகவும் கவனமாகப் பேச வேண்டும். ஏனென்றால் சூரியனின் வெப்பத்தை உங்கள் பேச்சின் மூலம் வெளிப்படுத்தலாம். இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் பேச்சில் கலை நயமும் இனிமையும் வந்து நன்மை தரும். இளைஞர்கள் சிறிய விஷயங்களில் பெரியவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அவர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு முன்னேற வேண்டும். அது நீங்கள் வெற்றிகளை குவிப்பதற்கான சிறந்த வழி.

மகரம்

சூர்யா கடந்த ஜூலை 17ம் தேதி முதல் மகர ராசியை விட்டு கடக ராசிக்கு பிரவேசித்துள்ளார். சூரியனின் இந்த மாற்றத்தைப் பார்க்கும் மேஷ ராசி இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில், சோம்பலை கைவிட்டு, சிறந்த பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் அன்றாட வழக்கத்தை ஒழுங்கமைத்து முறைப்படுத்துவது, உங்கள் வெற்றுக்கு கை கொடுக்கும். ஆகஸ்ட் 17 வரை, நீங்கள் ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைக்கும், ஆனால் உங்கள் சோம்பலினால் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சோம்பேறித்தனம் வெற்றிகளுக்கு இடையூறாக வரக்கூடாது என்பதில் மாணவர்களும், இளைஞர்களும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்தின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அல்லது இளைஞர்கள் அல்லது வரவிருக்கும் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், எந்த வகையிலும் தங்கள் நம்பிக்கையை கைவிடக் கூடாது. தினமும் காலையில் எழுந்தவுடன் நீராடி சூரியனை வணங்கி  வழிபடுங்கள். திருமணத்திற்கு காத்திருக்குக்கு இளைஞர்களுக்கும் திருமணம் கை கூடும் வாய்ப்பு கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Love Horoscope: ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ஒரே காதல் மழைதான்..! இன்றைய காதல் ராசி பலன்கள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News