வரும் 17 நாட்கள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம்

June Rashifal 2022: ஜூன் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 13, 2022, 02:20 PM IST
  • ஜூன் மாதம் செவ்வாய் தனது ராசியை மாற்றியது.
  • ஜூன் 20 குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார்.
  • ஜூன் மாதம் மேஷம் முதல் மீனம் வரை என்ன நடக்கும்.
வரும் 17 நாட்கள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் title=

கிரக நிலைகளின் அடிப்படையில் ஜூன் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஜூன் 15-30க்குள், சூரியன், சுக்கிரனுடன் செவ்வாய் ராசியில் மாற்றம் இருக்கப் போகிறது. அந்த வகையில் இந்த மாற்றத்தால் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படுத்தும். சில ராசிக்காரர்கள் கிரகங்களின் மாற்றத்தால் சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம், சிலருக்கு ஜூன் மாதத்தில் மீதமுள்ள 17 நாட்கள் சுப பலனளிக்கும். எனவே ஜூன் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் எந்தெந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும் என்பதை தெரிந்து கொள்வோம். 

கிரங்களின் ராசி மாற்றத்தின் விவரம்:
ஜூன் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது. ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். அதேபோல் சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார்.

மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். செயல்திறனில் முன்னேற்றம் சாத்தியமாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட எந்த வேலையும் நண்பர்களின் உதவியால் முடியும். பணத்தால் நன்மை உண்டாகும். இந்த மாதம் சில புதிய வேலைகள் தொடங்கலாம்.

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் தொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்- இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மத சம்பந்தமான பூஜைகள் நடக்கக்கூடும். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீண்ட பயணம் சாத்தியமாகலாம். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கௌரவம் உயரும்.

மீனம்- இந்த வாரம் புதிய சொத்து வாங்கலாம். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். திடீர் பண ஆதாயம் கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News