30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷஷ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு 2023 இல் லாட்டரி

Saturn Transit in Aquarius: சனிப் பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் காரணத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு 2023 இல் மகிழ்ச்சியும், பண வரவும் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Dec 6, 2022, 05:03 PM IST
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷஷ ராஜயோகம்.
  • மகிழ்ச்சியும், பண வரவும் கிடைக்கும்.
  • சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஷஷ ராஜயோகம், இந்த ராசிகளுக்கு 2023 இல் லாட்டரி

சனிப்பெயர்ச்சி 2023: சனி கிரகம் என்றால் அனைவருக்கும் பயம். அதன் தீய பார்வை வாழ்க்கையில் எழுச்சியை உருவாக்கும் என்பார்கள். அதேசமயம் சில நேரங்களில் மகிழ்ச்சியையும் தரும். அதன்படி புத்தாண்டு முதல் சில ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அனுகூலமாக இருப்பார். மேலும் ஜனவரி 17, 2023 அன்று சனி கிரகம் தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு மாறி 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார்.

சனியின் இந்த சஞ்சாரம் ஷஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. பஞ்ச மகாபுருஷ் ராஜயோகத்தில், ஷஷ யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில் வியாபாரத்தில் பதவி உயர்வும் அதிக பண வரவுமும் கிடைக்கும். எனவே புத்தாண்டு முதல் சனி பெயர்ச்சி பலன்களைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான் 

ரிஷப ராசி: ஷஷ ராஜயோகத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியைத் தரும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் ஜனவரி 17க்கு பிறகு நல்ல காலம் அமையும். அதே நேரத்தில், அதிர்ஷ்டமும் உங்களை ஆதரிக்கும்.

மிதுன ராசி: சனியின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். பல நல்ல விஷயங்கள் நடக்கும். துயரங்கள் அனைத்தும் தீரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

துலாம் ராசி: சனிப் பெயர்ச்சி துலாம் ராசிக்கு நல்ல பலனைத் தரும். வாழ்வின் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்-மனைவி உறவு இனிமையாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக இட மாற்றம் ஏற்படலாம். பண ஆதாயம் உண்டாகும்.

தனுசு ராசி: உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News