2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல்நலன் பாதிப்பு, எச்சரிக்கை தேவை!!

New Year 2023 Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் 2023-ல் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023ல் மொத்தம் 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2022, 03:00 PM IST
  • கன்னி ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
  • இந்த ஆண்டு உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்.
  • நீங்கள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும்.
2023 புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பண விரயம், உடல்நலன் பாதிப்பு, எச்சரிக்கை தேவை!!

2023-ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புதிய உத்வேகம், புதிய நம்பிக்கை, புதிய உற்சாகத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கையிலும், அந்த ஆண்டை தங்களுக்கு சிறந்ததாக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டிலும், கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களால், சில ராசிகள் அபரிமிதமான நற்பலன்களையும், சில ராசிகள் சுமாரான பலன்களையும் அனுபவிப்பார்கள். சில ராசிகள் அனுகூலமற்ற பலன்களையும் அனுபவிக்க வேண்டிவடும். 

ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கத்தைப் பார்த்து, ஒரு நபரின் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் 2023-ல் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023ல் மொத்தம் 4 ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம்

ஜோதிடத்தில் 12 ராசிகளில் இரண்டாவது ராசி ரிஷபம். 2023-ல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு மோசமான பலனைத் தரும். மூன்றாம் நபரின் குறுக்கீடு திருமண வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். இது தவிர ஏழாம் வீட்டில் கேது இருப்பது திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். படிப்பில் ஈடுபடாமல் மனம் அலையக்கூடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் தகராறு ஏற்படலாம்.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், உறவுகளில் மோதல்கள் அதிகரிக்கும். வேலையில் அழுத்தம் இருக்கும். எதிர்மறை எண்ணங்களால் நீங்கள் சூழப்பம் கொள்ளலாம். இந்த ஆண்டு யாரையும் புண்படுத்தும் தவறை செய்யாதீர்கள்.

மேலும் படிக்க | டிசம்பரில் 3 முறை நிலை மாறும் புதன்... பண மழையில் நனையப் போகும் ‘3’ ராசிகள்! 

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களும் 2022ல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். உங்களுடைய கோபம் திருமண வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆண்டின் நடுப்பகுதியில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த வருடம் யாரையும் எளிதாக நம்ப வேண்டாம். கூட்டாக வேலை செய்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிக அவசியமாகும். 

குடும்ப வாழ்க்கையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே தகராறு அதிகரிக்கும். செலவு அதிகரிப்பு உங்கள் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி 

கன்னி ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். நீங்கள் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, உடல்நலம் தொடர்பான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் மன உளைச்சல் ஏற்படும். மன அழுத்தத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கன்னி ராசிக்காரர்கள் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இந்த ஆண்டு அதிக செலவுகளை தவிர்க்க வேண்டும். கடன் சுமையால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இந்த ஆண்டு வியாபாரத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

2023ல் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பெரிய தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் துறையில் பணியில் தடைகள் ஏற்படும். எனினும், 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். 

மீனம்

2023ல் மீன ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை அதிகரிக்கும். இந்த ஆண்டு, குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

கிரகங்களின் மாறுதல்கள் உங்கள் செலவுகளை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். 2023ல் தடைகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இதனுடன், இந்த ராசியில் ராகு சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமாக இல்லை. இதனால் வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். காதல் மற்றும் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். வருடத்தில் பாதிக்கு மேல் இந்தப் பிரச்சனைகளோடுதான் கழியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News