சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!

Narasimha Jayanti 2024 May 21: அரக்கனைக் கொல்ல அவதாரம் எடுத்த விஷ்ணுவை போற்றும் நரசிம்ம ஜெயந்தி 2024! பக்தனை காக்க அவதரித்த காக்கும் கடவுள் விஷ்ணு ...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 20, 2024, 10:35 PM IST
  • பக்தனுக்காக உக்ர அவதாரம் எடுத்த விஷ்ணு
  • காக்கும் கடவுளின் நரசிம்ம அவதாரம்
  • ஆணவத்தால் அழிந்த அரக்கனின் கொட்டம்
சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21! title=

Narasimha Avtar Day 2024: இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்தும் நரசிம்மரின் அவதாரம் நிகழ்ந்த நரசிங்க சதுர்தசி நாள் மே 21. கடவுளை தஞ்சம் அடைந்தவர்களை காக்க இறைவன் வருவார் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கும் திருநாள் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தினம் இந்த ஆண்டு மே மாதம் 21ம் நாளன்று வருகிறது. தூய்மையான் பக்தி என்பது ஒருவரின் பிறப்புடன் தொடர்புடையதல்ல, குணம் தொடர்பானது என்பதை உணர்த்தும் விஷ்ணுவின் அவதாரத்தில் உக்ரமான அவதாரம் இது.

பக்தன் என்ற சொல்லுக்கு அடையாள அசுர குலத்தில் பிறந்த பிரகலாதான் என்றால், பக்தர்களை காக்கும் தெய்வம், பூமியில் பக்தனை காக்க வரும் என்பதை உணர்த்த வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். எனவே தான், வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது என்று சொல்லலாம்.

காசியப முனிவரின் மகனான இரண்யகசிபு, இறவா வரம் வாங்கி உலகில் உள்ள மக்களை எல்லாம் கொடுமைப்படுத்தி வந்தான். இரண்யகசிபு சாகா வரம் வாங்கக் காரணம் என்ன தெரியுமா?  இரண்யகசிபுவின் சகோதரன் இரணியாக்சனை வராக அவதாரத்தில் விஷ்ணு கொன்றுவிட்டார்.

இதனால் கோபமடைந்த இரணிகசிபு, விஷ்ணுவை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்லாண்டு காலம் பிரம்மாவை நோக்கி தவமிருந்து சாகாவரம் பெற்றான். புத்திசாலியான இரணியக்கசிபு, பிரம்மாவிடம் இறவா வரம் வாங்கும்போது வைத்த நிபந்தனைகள் ஆச்சரியமானவை. அவை என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

இரணியகசிபு பெற வரத்தின் முக்கிய அம்சங்கள்

மரணம் தொடர்பான வரம்

மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ மரணம் வரக்கூடாது

இரவிலோ, பகலிலோ இறக்கக்கூடாது

வீட்டிற்கு உள்ளேயோ, வெளியிலோ மரணிக்கக்கூடாது 

எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது

பெற்ற வரங்கள்

போட்டியாக யாருமே இருக்கக்கூடாது

அனைத்து உயிரினங்களுக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும்

காலத்தால் அழியாத வல்லமை வேண்டும்

பிரம்மா அளித்த வரம்

பிரம்மாவும் அளித்த வரத்தால் செருக்கடைந்த இரணியகசிபு, சக்தியை வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்தத் தொடங்கினார். தானே கடவுள் என்று சொல்லி மக்களை வதைத்தான் அரசன் இரண்யகசிபு . ஆனால், இளவரசனான பிரகலாதனோ தாயின் கருவில் இருந்தே விஷ்ணுவின் பக்தனாக இருந்த பக்திமான்.

உலகையே அச்சுறுத்தி அடிபணிய வைத்தாலும், மகனை கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் மகனையே கொல்ல துணிந்த அரக்க அரசன், பல்வேறு முயற்சிகள் செய்தும் பிரகலாதனை கொல்ல முடியவில்லை. 

மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!

நரசிம்ம அவதாரம்

பக்த பிரகலாதனின் அழைப்பை ஏற்று, ‘துணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் விஷ்ணு’ என்பதை உணர்த்தும் விதமாக, தூணை பிளந்து வெளிவந்தார் நரசிம்மர். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவின் இந்த அவதாரம், சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் காணப்பட்டது.

உக்ரத்துடன் வெளிவந்த நரசிம்மர், இரண்யகசிபுவுக்கு பிரம்மா கொடுத்த வரத்தை மதித்து, வரம் கேட்காத அம்சங்களில் தோன்றினார். நரசிம்மர், மனித உருவத்திலோ, மிருகம் அல்லது  பறவை உருவத்திலோ இல்லை. உலகில் இல்லாத ஒரு புதிய கலவையான உருவத்தை எடுத்தார் நரசிம்மர்.

பகலிலோ அல்லது இரவிலோ கொல்லாமல், அந்தி சாயும் நேரத்தில் வதம் செய்தார். அரக்கனைக் கொல்ல ஆயுதங்களை பயன்படுத்தாமல் தனது நகத்தையே பயன்படுத்தினார். இப்படி வரம் கொடுத்த பிரம்மாவுக்கும் சங்கடம் ஏற்படாமல், இரண்யகசிபு எதிர்பாராத அவதாரத்தில் அவதரித்த விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மரின் ஜெயந்தி நாளை இந்துக்களால் பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது.

 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய்ப் பெயர்ச்சியால் உறவுகளின் கசப்பை எதிர்கொள்ளும் 3 ராசிகள்! ஜூன் மாதம் கவனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News