மேஷத்தில் இணையும் குரு - புதன்... ‘இந்த’ ராசிகளுக்கு சுப பலன்கள்!

Astro News: மேஷ ராசியில், புதன் மற்றும் குரு பகவான் இணைவதனால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறியலாம்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2024, 03:48 PM IST
  • குரு பகவானும் புதனும் மேஷத்தில் இணைவது சுபமாக கருதப்படுகிறது.
  • பொன், பொருட்சேர்க்கை உண்டாகும்.
  • எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.
மேஷத்தில் இணையும் குரு - புதன்... ‘இந்த’ ராசிகளுக்கு சுப பலன்கள்! title=

Auspicious Effect of Jupiter & Mercury Conjunction: மார்ச் மாத இறுதியில் புதன் தன் நிலையை மாற்றப் போகிறார். மார்ச் 26 அன்று, கிரகங்களின் இளவரசர் தனது ராசியை மாற்றப் போகிறார். அதே நேரத்தில், குரு மேஷத்தில் அமர்ந்திருப்பார். மார்ச் 26 அன்று, புதன் மீனத்திலிருந்து  ஏற்கனவே குரு பகவான் இருக்கும் மேஷத்திற்கு மாறுகிறார். இரண்டு கிரகங்களும் மேஷத்தில் இணைவது சுபமாக கருதப்படுகிறது. எனவே, புதன் மற்றும் குரு பகவான் இணைவதனால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதை அறியலாம்

சிம்ம ராசி  (Leo Zodiac)

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் மற்றும் புதன் சேர்க்கை பலனளிக்கும். வேலை செய்பவர்கள் பாராட்டுக்குரியவர்களாக மாறுவார்கள். நீங்கள் எவ்வளவு அச்சமின்றி இருப்பீர்களோ, அவ்வளவு வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடும். வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.  வியாபாரிகளுக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். சிறு சிறு பிரச்சனைகள் வரலாம். ஆனால், உங்கள் துணையின் ஆதரவுடன் எளிதில் தீர்க்க முடியும்.  சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கடக ராசி (Cancer Zodiac)

குரு பகவான் மற்றும் புதன் இணைவது கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம் மற்றும் புதிய முதலீட்டு விருப்பங்களை நீங்கள் சிந்திக்கலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். முயற்சிக்கு உண்டான லாபம் கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். 

மேலும் படிக்க | Mercury Transit 2024: சனியின் ராசியில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட், அமோகமான காலம்

தனுசு ராசி (Sagittarius Zodiac)

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் மற்றும் புதன் இணைவது சாதகமாக கருதப்படுகிறது. புதன் மற்றும் குரு பகவான் ஆகிய கிரகங்களின் சுபச் செல்வாக்கால் உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் தொடங்கும். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. மகிழ்ச்சி மற்றும் செல்வம் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்களின் வழியில் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ராமரின் அருளை பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் விஷ்ணுவை வழிபட்டால் வாழ்க்கை அமோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News