லக்ஷ்மி நாராயண ராஜயோகம்... அக்டோபருக்கு முன் ‘இந்த’ ராசிகள் செல்வந்தர்களாவது உறுதி!

Mercury Transit & Lakshmi Narayana Yogam: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும், புதன் ஞானம், நினைவாற்றல், அறிவு, ஜோதிடம், கணிதம், தொழில்முனைவோர் மற்றும் பொது பேச்சாளர் ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 28, 2023, 02:25 PM IST
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலம் இது.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
லக்ஷ்மி நாராயண ராஜயோகம்... அக்டோபருக்கு முன் ‘இந்த’ ராசிகள் செல்வந்தர்களாவது உறுதி! title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகத்தை வலுவாகக் கொண்ட ஒரு நபர், தனது பேச்சின் மூலம் மக்களைக் கவரும் சக்தியை கொண்டுள்ளார். தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். புதன் ஒருவருக்கு உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு கல்வி அறிவு, ஞானம், கணிதம், அறிவியல் என அறிவுசார்ந்த எல்லா விஷயங்களிலும் சிறப்பாக விளங்குவர். ஜோதிடத்தின்படி, ஜூலை 25, 2023 அன்று புதன் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் நுழைந்தார். சூரியனின் ராசியான சிம்மத்தில் புதன் நுழைவது லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. 

சிம்ம ராசியில் பெயர்ச்சியாகி உள்ள புதன், ஆகஸ்ட் 24, 2023 முதல், சிம்மத்தில் வக்ர நிலையை அடைகிறார். செப்டம்பர் 16 ஆம் தேதி வரை புதன் வக்ர நிலையிலேயே இருப்பார். இதற்குப் பிறகு, வக்ர நிவர்த்தி அடைந்து அக்டோபர் 1, 2023 அன்று, புதன் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். புதன் ஸ்தானத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைவரின் தொழில் மற்றும் பொருளாதார நிலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமான பலனைத் தரப்போகிறது. சிம்ம ராசியில் புதன் நுழைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

புதன் பெயர்ச்சி கீழ்கண்ட ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் அறிவுத்திறன் சிறப்பாக இருக்கும். நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் ஆளுமையின் செல்வாக்கு அதிகரிக்கும். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் நேரம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலம் இது. அலுவலக வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்

புதனின் பெயர்ச்சி சிம்ம ராசியில் உள்ளது. அதனால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். உங்கள் அறிவுத் திறன மற்றும் தொடர்பு பாணி சிறப்பாக இருக்கும். வேலையை விரைவாக முடிப்பீர்கள். தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் நடத்தை மற்றும் பேச்சின் வலிமையின் அடிப்படையில் வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மேலும் படிக்க | சிம்மத்தில் அஸ்தமனம் ஆகும் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்..!

துலாம்

புதன் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உங்கள் எண்ண ஓட்டத்தை நீங்கள் நன்றாக வைத்திருக்க முடியும். இதன் பலனை நீங்கள் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வாழ்வில் செழிப்பு இருக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும்.

தனுசு

புதனின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். ஆனால் செலவினை கட்டுப்படுத்துங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். முக்கியமான சந்திப்பில் உங்கள் கருத்தை வெற்றிகரமாக முன்வைப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro Traits: பெண்களை வசீகரிப்பதில் வல்ல ‘சில’ ராசி ஆண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News