வெற்றி, பணம், புகழ்... சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளின் வாழ்க்கை நாளை முதல் பிரகாசிக்கும்

Venus Transit: சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 3, 2023, 01:33 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் வக்ர நிவர்த்தி பண வரவு மற்றும் செல்வத்திற்கு சாதகமாக கருதப்படுகிறது.
  • பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • உங்கள் செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும்.
வெற்றி, பணம், புகழ்... சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளின் வாழ்க்கை நாளை முதல் பிரகாசிக்கும் title=

சுக்கிரன் வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: செப்டம்பர் 4 ஆம் தேதி, அதாவது நாளை கடக ராசியில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்து தனது நேரடி இயக்கத்தை தொடங்குவார். அதாவது கடகத்தில் சுக்கிரன் நேர்கோட்டில் நகரத் தொடங்குவார். ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனின் நேரடி சஞ்சாரம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன் பணம் மற்றும் காதல் உறவுகளின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களைத் தருவதாகக் கூறப்படுகிறது. 

சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்கள் வாழ்வில் இதனால் அபரிமிதமான நற்பலன்கள் உண்டாகும். இவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து முடியும். இந்த முறை சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக வலம் வருவார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் 

ரிஷப ராசி

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். மேலும் அனைவரின் உதவியையும் பெறுவீர்கள். உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். அனுபவம் வாய்ந்த ஒருவர் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவக்கூடும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். பதவி உயர்வும் பெறலாம். வியாபாரத்திலும் உங்களுக்கு வெற்றியின் கதவுகள் திறக்கப்படும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுக்கிரனின் வக்ர நிவர்த்தி அதிக நன்மை தரும். இந்த மாற்றம் உங்களுக்கு தொழில் ரீதியாக சில சிறப்பு மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த மாற்றத்தால் நீங்கள் அதிக பயனடைவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் ஆதாயம் உண்டாகும். கடின உழைப்பால் லாபம் அடைவீர்கள். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் நல்ல வேலைக்காக போனஸ் மற்றும் ஊக்கத்தொகையைப் பெறலாம். நீங்கள் வேலையில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம், அவற்றை கவனமாக தேர்ந்தெடுக்கவும். வெளிநாட்டில் வேலை தேட முயற்சிப்பவர்களுக்கு இது லாபகரமான வாய்ப்பாக அமையும்.

மேலும் படிக்க | அள்ளியும் தருவார்.. கிள்ளியும் தருவார் குரு: எந்த ராசிக்கு எப்படி இருக்கும்?

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு சுக்கிரன் வக்ர நிவர்த்தியால் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும், அதே நேரத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில புதிய யோசனைகளில் ஈடுபடலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சில வலுவான முடிவுகளை எடுப்பீர்கள், அது நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும். நீங்கள் கூட்டாண்மையில் வியாபாரம் செய்தால், சில புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வரக்கூடும். புதிய தொழில் தொடங்கவும் இது ஏற்ற நேரமாக இருக்கும். சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் உங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த தொழில் இருந்தால் வருமானம் அதிகரிக்கும்.

துலாம் ராசி

துலா ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் வக்ர நிவர்த்தி பண வரவு மற்றும் செல்வத்திற்கு சாதகமாக கருதப்படுகிறது. பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தின் தேவைகளை நீங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும். நீங்கள் ஏதேனும் அவுட்சோர்சிங் தொழிலில் ஈடுபட்டிருந்தால் இந்த முறை நல்ல லாபம் கிடைக்கும். இதனுடன், வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பனம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அதை இப்போது சேமிக்கவும் முடியும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் உறவு வலுவாக இருக்கும்.

தனுசு ராசி

சுக்கிரனின் வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தொழில் தொடர்பான கவலைகள் நீங்கும். உங்கள் தொழிலில் இந்த நேரத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆனால் தொழிலையும் கூட்டாளிகளையும் நீங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். திடீரென்று பணம் வந்து சேரும். மூதாதையர் சொத்துக்கள் மூலம் வருமானம் கூடும். தொழில் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெற உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் உதவி தேவைப்படலாம். செலவைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் உங்கள் வரவு செலவு கட்டுக்கடங்காமல் போகலாம். மற்றபடி இந்த நேரம் உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் சனியால் குபேர யோகம்.. செல்வ மழை எந்த ராசிக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News