சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அரசன் வாழ்க்கை

Venus Transit 2024: கும்ப ராசியில் பயணித்து வந்த சுக்கிரன் மீன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைந்துள்ளது. இதனால் எந்த ராசிக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 1, 2024, 07:39 PM IST
  • எந்த ராசிக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும்.
  • சுக்கிரன் மீன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைந்துள்ளது.
  • முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அரசன் வாழ்க்கை title=

Venus Transit 2024: காதல் நாயகன் என்று அழைப்படும் சுக்கிரன் மீன ராசியில் இடப் பெயர்ச்சி அடைந்துள்ளார். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் பெயர்ச்சி, அதாவது ராசியில் ஏற்படும் மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சிகள் மக்களின் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அந்த வகையில் பேச்சாற்றல், திருமண வாழ்க்கை, வசதி, செழுமை, உலக இன்பம், கலை, அழகு, குழந்தைகள், பணம், ஈர்ப்பு, ஆடம்பரம், அன்பு, பெருமை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் 31, 2024 அன்று மீனத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாற்றம் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனவே எந்த ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்: சுக்கிரனின் பெயர்ச்சி வேலை, வியாபாரத்தில் சுப பலன்களைத் தரும். பதவி உயர்வு பெறலாம், லாபம் ஈட்டும். இனி உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். வீண் செலவுகளை செய்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்: சுக்கிரன் பெயர்ச்சி தொழில் மற்றும் வேலையில் சாதகமான பலனைத் தரும். வேலையில் வெற்றி பெறலாம். வசதிகளும் பெருகும். அரச பிரமாண்ட வாழக்கை கிடைக்கும். 

மிதுனம்: சுக்கிரன் பெயர்ச்சி வேலையில் சாதகமான பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு பயணம் போகலாம். பணத்தட்டுப்பாடு நீங்கும். சுற்றுலா செல்லலாம்.

மேலும் படிக்க | பூரட்டாதியில் சனி பகவான்... இனி இந்த ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்..!

கடகம்: சுக்கிரன் பெயர்ச்சியால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். காதல் உறவு வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.

சிம்மம்: சுக்கிரனின் பெயர்ச்சி பாதகமான விளைவைத் தரும். வாழ்க்கையில் புதிய சவால்கள் எழும். செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலை மோசமடையலாம். முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி: சுக்கிரன் பெயர்ச்சியால் வெளிநாடு பயணம் செல்லலாம். நன்மைகள் அதிகரிக்கும். வணிகம் முன்னேறும் அடையும். பெரிய ஒப்பந்தங்களை பெறலாம், லாபம் பெருகும்.

துலாம்: சுக்கிரன் பெயர்ச்சியால் வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண நஷ்டம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்: வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும், தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. பண இழப்பீடு ஏற்படலாம்.

தனுசு: சுக்கிரன் பெயர்ச்சியால் அரசனைப் வாழ்க்கை அமையும். மகிழ்ச்சி பெருகும். வீட்டில் அமைதி நிலவும். உங்களுக்கு பிடித்தமான பொருளை வாங்குவீர்கள்.

மகரம்: சுக்கிரன் பெயர்ச்சி தொழில் ரீதியாக நன்மை தரும். வேலையில் நல்ல பலனைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். வெற்றி மழை வீசும். பண வரவு உண்டாகும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கூடும். இலக்குகளை அடைவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

மீனம்: சுக்கிரன் பெயர்ச்சியால் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் பெறலாம். மார்ச் 31 முதல் ஏப்ரல் 25 வரையிலான நேரம் அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 50 ஆண்டுக்கு பின் ராகு சுக்கிரன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்.. இந்த ராசிகளுக்கு பொன்னான காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News