குருவின் வக்ர பெயர்ச்சியால் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்கும் 3 ராசிகள்

குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். அந்த ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2022, 02:21 PM IST
  • குருவின் பார்வையால் கோடி நன்மைகளை பெறும் ராசிகள்
  • குரு வக்ர நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பதன் பலன்கள்
  • 3 ராசிகளுக்கு நவம்பர் 24 வரை கொண்டாட்டம்
குருவின் வக்ர பெயர்ச்சியால் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்கும் 3 ராசிகள் title=

புதுடெல்லி: ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அது அனைவரின் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். குரு வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கடந்த ஜூலை 29 அன்று குரு பகவான் வக்ரமானதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலித்து, அதை அனைவரும் அனுபவித்து வருகின்றனர். மேஷம், துலாம், சிம்மம் மற்றும் மகர ராசியினருக்கு குருவின் இந்த வக்ர நகர்வு அசுபமான பலன்களை கொடுக்கிறது.

குரு பகவான், நவம்பர் வரை மட்டுமே மீனத்தில் வக்ர கதியில் இருப்பார் என்பதால், இந்த நிலையும் மாறிவிடும். ஆனால், தற்போது குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். அந்த ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா? 

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களின் கதி சூரியனைப் போல பிரகாசிக்கும்

ரிஷபம் - தேவ குரு பிரகஸ்பதி, குரு என்றும் அழைக்கப்படுகிறார். அவர், தனது ராசியிலிருந்து 11வது வீட்டில் பின்வாங்கியுள்ளார். ஜோதிடத்தில், ஜாதகத்தின் 11வது இடம் லாபம் மற்றும் வருமானத்தின் வீடு என்று அழைக்கப்படுகிறது.

எனவே, ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு கிரகத்தின் வக்ர பெயர்ச்சி ,புதிய வருமான ஆதாரங்களை திறந்துவிடும். தொழில் செய்பவர்களுக்கு லாபமான காலம் இது. வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | குரு-சந்திரன் இணைவினால் கஜகேசரி ராஜயோகம்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு பிற்போக்கான குரு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். வியாழன் கிரகம் மிதுனத்தின் பத்தாம் வீட்டில் பிற்போக்கானது. வியாழனின் தாக்கத்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் - குரு பகவான் பிற்போக்கு நிலையில் இருப்பதால் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவைத் தட்டும்.  தடைபட்ட வேலைகள் முடிவடையும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கல்வித் துறையில் தொடர்புடையவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | செப்டம்பர் 18ம் தேதிக்குள் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

மேலும் படிக்க | செப்டம்பரில் மாறும் கிரகங்களால் அமாவாசையில் இருந்து தலைவிதி மாறும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News