குருவின் அருளால் 22 ஏப்ரல் 2023 வரை இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்

Astrology: தேவகுரு வியாழனின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 04:08 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
  • இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும்.
  • கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.
குருவின் அருளால் 22 ஏப்ரல் 2023 வரை இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமாக இருக்கும் title=

ராசிகளில் குரு பகவானின் தாக்கம்: ஜோதிடத்தில், வியாழன் கிரகத்தின் ராசியில் ஏற்படும் மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரது ஜாதகத்தில் வியாழன் கிரகத்தின் நிலை நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து உச்சங்களயும் தொடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏப்ரல் 12 ஆம் தேதி, வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்திற்குள் நுழைந்தார். அவர் 22 ஏப்ரல் 2023 வரை இந்த ராசியில் இருப்பார். தேவகுரு பிருஹஸ்பதி ஒவ்வொரு ஆண்டும் ராசியை மாற்றுகிறார். வியாழன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் மீது அவருடைய அருள் நிலைத்திருக்கும். தேவகுரு வியாழனின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

வியாழன் கிரகத்தின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மேஷ ராசியினருக்கு நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பழைய முதலீடுகள் மூலம் நல்ல பலனைப் பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | புதன் சுக்கிரன் இணைப்பால் இந்த ராசிகளுக்கு இரட்டை ராஜயோகம்: ஜூலை மாதம் ஜொலிக்கும் 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வின் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் தற்போது உங்களுக்கு கிடைக்கும். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உங்களுக்கு பல சாதகமான சூழல்கள் ஏற்படும். அனுகூலமான செய்திகளை பெறுவீர்கள். பொருளாதார நிலையில் சாதகமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. வேலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். பலரது பாராட்டுகள் வந்து குவியும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் நிகழும் 3 கிரகங்களின் ராசி மாற்றம்; நேரடி அருள் பெரும் ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News