செவ்வாய் ராசி மாற்றம்: இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம், லாபம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்

Mars Transit: செவ்வாயின் ராசி மாற்றத்தால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காணவுள்ள ராசிகளை பற்றிம் இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2022, 12:05 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படலாம்.
  • செவ்வாயின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித்தரும்.
  • இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
செவ்வாய் ராசி மாற்றம்: இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம், லாபம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும் title=

செவ்வாய் ராசி மாற்றம்: ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகிறது. சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக அமையும். சில ராசிக்காரர்கள் இதன் காரணமாக சிரமங்களை சந்திக்க நேரிடும். 

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் ஜூன் 27ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தது. செவ்வாய் ஆற்றல், தைரியம், வீரம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அடையாளமாகும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும், சிலருக்கு நஷ்டம் வரலாம்.

செவ்வாயின் ராசி மாற்றத்தால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை காணவுள்ள ராசிகளை பற்றிம் இந்த பதிவில் காணலாம்.

சிம்மம்:

செவ்வாயின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பணியிடத்தில் வெற்றிகள் கைகூடும், முன்னேற்றங்களை காண்பீர்கள். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். 

மேலும் படிக்க | இந்த 2 ராசிக்காரர்களின் தலைவிதி ஜூலை முதல் திறக்கும் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றத்தால் அனுகூலமான விளைவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

கன்னி:

செவ்வாயின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித்தரும். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். அன்பானவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

இந்த நேரத்தில், நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். இந்த காலகட்டத்தில் சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் அனுகூலமான பலன்களை அளிக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து சேரும். இந்த நேரத்தில் புதிய வேலைகளை தொடங்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். இது முதலீட்டுக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு வருங்காலத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். கணவன் / மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். 

மேலும் படிக்க |  ஜூலை 17 வரை இந்த 3 ராசியினருக்கு பண வரவு உண்டாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News