குரு பெயர்ச்சியால் அவதிப்பட போகும் சில ராசிகள்! நிம்மதியாய் இருக்க பரிகாரங்கள்

Guru Vakri Remedies: செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். குருவின் வக்ர பெயர்ச்சியால் துன்பப்படுபவர்கள் இந்த பரிகாரங்களை செய்தால் நிம்மதியாக வாழலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2023, 04:12 PM IST
  • குருவின் வக்ர பெயர்ச்சி பரிகாரங்கள்
  • புத்தியை சீராக்கும் குரு பரிகாரங்கள்
  • செப்டம்பர் 4ம் தேதி குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சியால் அவதிப்பட போகும் சில ராசிகள்! நிம்மதியாய் இருக்க பரிகாரங்கள் title=

குரு பெயர்ச்சியால் அவதிப்பட போகும் சில ராசிகள்: இந்து மதத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் இயக்கத்தின்போது, 12 ராசிகளின் வீடுகளிலும் தங்குகின்றன, நேர் சுற்றாகவும், எதிர்திசையிலும் சுற்றி வருகின்றன. ஒன்பது கிரகங்களின் இயக்கமானது உலகத்தில் உள்ள அனைவருக்கும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

 ஜோதிட சாஸ்திரத்தின் படி, புத்திக்கு அதிபதியான குரு பகவான், இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, இன்னும் சில நாட்களில் அதாவது செப்டம்பர் 4, 2023 அன்று மாலை 5 மணியளவில் மீண்டும் வந்த இடத்திற்கு திரும்பி செல்வதற்காக கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் பயணிப்பார்.

இந்த வக்ர பெயர்ச்சிக்கு பிறகு 31 டிசம்பர் 2023 அன்று காலையில், வக்ர நிவர்த்தி அடைவார் குரு பகவான். குரு வக்ர பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்

குரு பெயர்ச்சி தீமைகள்

சில ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். ஆனால், இந்த நேரத்தில் சில ராசிகளுக்கு வேலையில் தடை, திருமணத் தடை, அவமானம், பண நஷ்டம் என பல பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றில் இருந்து நிவாரணம் பெற சில குரு பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

பரிகாரங்கள், உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவும் சீராகும்.  

பரிகாரங்கள்

குரு பகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலையை மாலை கட்டியோ அல்லது தானமாகவோ அளிக்கலாம். சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை வியாழக்கிழமை தோறும் செய்தால் குருவின் அருள் கிடைக்கும்.

சிவ வழிபாடு

அதேபோல் திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்  ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்

நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும். நவகிரகத் தலங்களில் குருவின் தளமான ஆலங்குடிக்குச் சென்று வழிபாடு செய்யலாம்.

மேலும் படிக்க | அட்டகாசமான ராஜயோகம்: குரு வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு!!

கோவில்களில் வழிபாடு

சென்னை போரூரில் எழுப்பப்பட்ட அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோயிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடுவது மேன்மை தரும். செந்திலாண்டவரை திருச்செந்தூரில் வழிபட்டால் குருவருள் கிடைக்கும். சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயம், தென்குடித்திட்டை போன்ற குருவின் அருள் தரும் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தால் குருவின் அருள் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் குருவுக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுகளை வாங்கி, தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும், மங்களகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | துலா ராசியில் கேது... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News