தொட்டதெல்லாம் வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

Mars Transit: தற்போது நடந்துள்ள செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள் என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 09:12 AM IST
  • கன்னி ராசியில் செவ்வாயின் பிரவேசம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
  • இந்த காலகட்டத்தில், சமூகத்தில் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும்.
  • தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தொட்டதெல்லாம் வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை title=

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் 18, 2023 அன்று மாலை 3.55 மணிக்கு, புதனின் ராசியான கன்னியில் செவ்வாய் பெயர்ச்சி ஆனார். அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த ராசியில் செவ்வாய் இருப்பார். இதன் பிறகு செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைவார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் சுபமாக இருந்தால், அந்த நபருக்கு பல வித சுப பலன்கள் கிடைக்கும். மேலும், அந்த நபர் சக்திவாய்ந்தவராகவும் தைரியசாலியாகவும் மாறுகிறார். மறுபுறம், செவ்வாய் அசுபமாக இருக்கும்போது, ​​​​ஒரு நபர் சமூகத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய தூண்டப்படுகிறார்.

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்கள் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் இவர்களுக்கு பொருளாதாரத் துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதே நேரத்தில், நீதிமன்றத் தரப்பிலும் இவர்கள் பல வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் இவர்கள் எதிரிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த நேரத்தில், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், உங்கள் பேச்சையும் கட்டுப்படுத்தவும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இந்த காலத்தில் வணிகத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இதனுடன், மிதுன ராசிக்காரர்கள் பொருளாதாரத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில், பணியிடத்தில் புதிய பொறுப்பைக் காணலாம். இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். வியாபாரம் போன்றவற்றை அதிகரிக்க நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | வக்ர சனியால் கோடீஸ்வர யோகம்.. அதிர்ஷ்ட வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

கடக ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி வரையிலான காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நன்மை பயக்கும். வியாபாரத்தை அதிகரிக்க நினைத்தால் இந்த நேரத்தில் லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி

ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசியில் செவ்வாயின் பிரவேசம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில், சமூகத்தில் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆசைகள் நிறைவேற வாய்ப்பு உண்டு. நீங்கள் ஏதேனும் காரணத்திற்காக கடன் வாங்கியிருந்தால், அதை இப்போது முழுமையாக அடைத்து விடுவீர்கள். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

தனுசு ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் பணிபுரியும் இடத்தில் சிறப்பு நன்மைகள் இருக்கும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையும்.வேலையில் புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜாதகத்தில் சனி எப்போது சுபமாக இருக்கும்? எப்போது அசுபமாக இருக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News