Jupiter Transit: இன்னும் ஒரு மாதத்திற்கு நிம்மதியாக இருந்துக் கொள்ளலாம்! அதன் பிறகு??

Jupiter transit Bad Effects: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதிலும் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு ஒன்று. நவகிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2022, 11:16 AM IST
  • தொழில்-வியாபாரத்தில் பின்னடைவு ஏற்பதும்
  • உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை கவனமுடன் கையாளவும்.
  • வர்த்தகர்கள் கவனமாக செயல்படவேண்டும்
Jupiter Transit: இன்னும் ஒரு மாதத்திற்கு நிம்மதியாக இருந்துக் கொள்ளலாம்! அதன் பிறகு?? title=

Jupiter transit Bad Effects: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதிலும் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு ஒன்று. நவகிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்து இராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தின் காரகராக கருதப்படுகிறார். ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அது வாழ்வில் வெற்றிகளைத் தரும்.

தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான், நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார். தற்போது வக்ர நிலையில் இருக்கும் குரு, நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்.

குருவின் ராசி மாற்றமானது 3 ராசிக்காரர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் நிதானத்தையும் ஏற்படுத்தும். குருப் பெயர்சியால், எந்தெந்த ராசிக்காரர்கள் துன்பத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்? தெரிந்துக் கொள்வோம்.  
 
சிம்மம்: 

குருவின் இந்த சஞ்சாரம், சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டியதை உணர்த்தும் காலமாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தத்தை விட மிகவும் குறைவாக குறையும். குரு பெயர்ச்சி காரணமாக வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் வரலாம்.

திடீரென்று பண வரவு கிடைக்கும் என்றாலும், அதற்காக மிகவும் கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், இன்னும் சில நாட்கள் நிதானமாக காத்திருக்க வேண்டும். வர்த்தகர்கள், தங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு  குருவின் இந்த சஞ்சாரம் அசுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கான காத்திருப்பு முடியும். ஆனால் எதிர்பார்த்த லாபமோ, சம்பளமொ கிடைகாது. புதிய தொடர்புகள் உருவாகும், அது எதிர்காலத்தில் நன்மைகளைத் கொண்டு வரலாம் என்றாலும், அதற்கான வித்தை தற்போது போடுகிறோம் என்பதை உணரும் சந்தர்ப்பமும் அமையும்.

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் சற்று பின்னடைவைத் தரும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு, இதனால் பொருளாதார நிலையில் சற்று சிக்கல் ஏற்படலாம், ஆனால் சுப செலவு தானே என்று மனதை தேற்றிக் கொள்ளவேண்டும். கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க நினைத்தாலும் தடை நீடிக்கும். தேர்வு அல்லது நேர்காணலில் கலந்துக் கொள்பவர்கள், கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News