கிருத்திகையில் குரு பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!!

Jupiter Transit in Krithika Star: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2024, 12:05 PM IST
  • தொழில், அரசியல் என அனைத்திலும் வெற்றி பெறலாம். செல்வ வளமும் கூடும்.
  • குருபெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
  • குரு பகவான் சூரியக் கடவுளின் நட்பு கிரகம்.
கிருத்திகையில் குரு பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!! title=

Jupiter Transit in Krithika Star: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மற்றுவதை போலவே நடசத்திரங்களையும் மாற்றுகின்றன, அதன் விளைவுகளை அனைத்து ராசிகளிலும் காணலாம். தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16 ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். கிருத்திகா நட்சத்திரம் சூரியக் கடவுளால் ஆதிக்கம் செலுத்தும் நடத்திரம். குரு பகவான் சூரியக் கடவுளின் நட்பு கிரகம். அப்படிப்பட்ட நிலையில் குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். வேலை, தொழில், அரசியல் என அனைத்திலும் வெற்றி பெறலாம். செல்வ வளமும் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம் ராசி: குரு பெயர்ச்சி பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவது மிதுன ராசிகளுக்கு (Gemini Zodiac) சாதகமாக இருக்கும். ஏனென்றால், உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கவுரவம் மரியாதைக்கும் உரிய வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் மரியாதை மற்றும் கௌரவம் பெற்று சமூகத்தில் அந்தஸ்தை பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் பெருமளவில் உயரக்கூடும். முதலீடுகள் இலாபத்தை கொடுக்கும் புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கலாம். அலுவல் பணிகளில் துரிதத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். 

கடக ராசி: குரு பெயர்ச்சி பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சியாவது கடக ராசிக்காரர்களுக்கு (Cancer Zodiac) சாதகமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பணி உயர்வு மற்றும் பதவி உயர்வு கூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் அரசியலில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறலாம். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் பெறுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள்.

மேலும் படிக்க | இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. பாதிப்பு ஏற்படுத்துமா? ஜோதிடம் சொல்வது என்ன?

தனுசு ராசி: குரு பெயர்ச்சி பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு (Sagittarius Zodiac) மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் உங்கள் ராசியின் அதிபதி குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் பொருளாதார ரீதியாக பயனடைவீர்கள். மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ளலாம். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 50 வருடங்களுக்கு பிறகு சதுர்கிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News