50 வருடங்களுக்கு பிறகு சதுர்கிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும்

Surya, Budh, Rahu, Shukra Yuti In Meen: ஜோதிடத்தின் படி, வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் புதன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் மூலம் சூரியன் புதன் மற்றும் ராகு சேர்க்கை ஏற்படும். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 6, 2024, 03:04 PM IST
  • வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
  • மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
  • சுகபோக, ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.
50 வருடங்களுக்கு பிறகு சதுர்கிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும் title=

Suriyan, Budh, Rahu And Shukra Yuti In Meenam Rasi : ஏப்ரல் மாதம் கிரகப் பெயர்ச்சி, வசந்த நவராத்திரி மற்றும் சூரிய கிரகணம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மீன ராசியில் புதன் இடப் பெயர்ச்சி அடைகிறார். ராகு, சுக்கிரன் மற்றும் சூரியன் ஏற்கனவே இந்த ராசியில் தான் பயணித்து வருகிறார்கள். தற்போது மீனத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரஹி யோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் உள்ளிட்ட யோகங்கள் உருவாகும். இதன் சுப பலன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். இதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் பொருள் வசதியும் செல்வமும் பெருகும். மேலும் சூரியபகவானின் அருளால் தன்னம்பிக்கை பெருகும், அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான தடைகள் நீங்கும், இதனுடன் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும், செழிப்பும் பெருகும். இந்நிலையில் மீன ராசியில் சதுர்கிரஹி யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

மிதுனம் (Gemini Zodiac Sign): சதுர்கிரஹி யோகத்தால் தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழல் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கு பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புகள் உண்டு. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கட்டாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.  அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவுக்கு புதிய வழிகள் அமையும். 

மேலும் படிக்க | இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. பாதிப்பு ஏற்படுத்துமா? ஜோதிடம் சொல்வது என்ன?

கன்னி (Virgo Zodiac Sign): புதன், சுக்கிரன், சூரியன் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் சமூக பதவி, கௌரவம் உயரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொருளாதார லாபம் உண்டாகும். அரசு வேலைக்குத் தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கலாம். உங்கள் துணையின் முழுமையான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்கள் அனுபவிப்பீர்கள். பங்குதாரர் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள்.

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்கள் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் பெரும் பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் எவ்வித பஞ்சம் இருக்காது. உறவுகளில் அன்பு அதிகரிக்கும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். பணவரவுக்கான புதிய வழிகள் அனைத்து இடங்களில் இருந்து பெறலாம். உங்கள் மனைவியிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். சுகபோக, ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமான நடந்து முடியும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புதன் வக்ர பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News