துன்பங்களை போக்கும் கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி

Sashti Viratham 2022: சஷ்டி விரதம் துவங்கும் முறை மற்றும் கடைப்பிடிக்கும் முறை, விரதம் பூர்த்தி செய்யும் முறை என அனைத்து விசயங்களையும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 5, 2022, 07:02 AM IST
  • சஷ்டி விரதம் இருப்பது எப்படி
  • சஷ்டி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
  • விரதத்தின் போது செய்ய வேண்டியவை
துன்பங்களை போக்கும் கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி title=

மாதந்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும்.

இந்த நிலையில் இன்று சஷ்டி தினம் ஆகும். இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து பூஜியுங்கள். கந்தசஷ்டி கவசம் முதலானவை பாராயணம் செய்து வழிபடுங்கள். மேலும் சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.

சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

மாதம் மாதம் வரும் திதி விரதமிருந்தால் விதி மாறும்  என்பது நம்பிக்கை. எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று சஷ்டி திதியாகும். இதனால் இன்றைய தினம் சஷ்டி விவரம் மேற்கொண்டு மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

இந்த வியவரம் பொதுவாக குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இருக்கலாம். அதேபோல் விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல் மற்றும் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும், எச்சரிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News