2023 மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் ‘இவை’ தான்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Lucky Zodiacs of 2023 March: மார்ச் மாதத்தில் புதன், சுக்ரன், செவ்வாய், சூரியன் போன்ற முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும். இந்த கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2023, 02:55 PM IST
  • நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
2023 மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் ‘இவை’ தான்! தொட்டதெல்லாம் பொன்னாகும்! title=

மார்ச் மாதத்தில் புதன், சுக்ரன், செவ்வாய், சூரியன் போன்ற முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும். இந்த கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் அதிர்ஷ்டம் என்பதை மாத ராசி பலனின் மூலம் தெரிந்து கொள்வோம்.

2023 மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!
 
ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் தொழில் அல்லது அலுவக வேலை சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை மார்ச் மாதத்தில் எடுக்கலாம். நீங்கள் எடுக்கு முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி. எதை நினைத்தாலும் இந்த மாதம் கிடைக்கும். பொதுவாக, உங்கள் செயல் அனைத்திலும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் சில சாதனைகளை படைக்கலாம். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பண ஆதாயம் இருந்தாலும் செலவுகளும் இருக்கும். ஆனால், உங்கள் நிதி நிலையை அது பாதிக்காது. காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் காதல் துணையுடன் சிறந்த வகையில் நேரத்தை செலவிடுவீர்கள். திருமணம் ஆகாதவர்க்கு திருமணம் நடக்கும். 

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

துலாம்: 

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில்/ அலுவலக வேலையில் முன்னேற்றத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள். மார்ச் மாத தொடக்கத்திலேயே இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இரண்டிற்கும் இந்த மாதம் சாதகமான பலன்களைக் கொடுக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அலுவக வேலையில் மற்றும் தொழிலில் ஸ்திரத்தன்மை இப்போது கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News