குரு வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், டபுள் ஜாக்பாட்

Guru Peyarchi Palan: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். இதனால் சில ராசிகளுக்கு குபேர யோகம், டபுள் ஜாக்பாட் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 2, 2023, 03:37 PM IST
  • குரு பெயர்ச்சி திடீர் செலவுகளை அதிகரிக்கச் செய்வார்.
  • எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும்
  • தனுசு ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
குரு வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், டபுள் ஜாக்பாட் title=

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் கோடிஸ்வர யோகம் உண்டாகும். அந்தவகையில் மேஷ ராசியில் குரு பெயர்ச்சி அடைந்து தற்போது பயணித்து வருகிறார். இதனிடையே குரு பகவான் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இந்த நான்கு மாதம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் சில ராசிகளில் சுப பலனைத் தரும். எனவே குரு வக்ர பெயர்ச்சி என்ன மாதிரியான பலன்கள் தரப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

தனுசு: அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரு பகவானின் பார்வை தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. தனுசு ராசிக்காரர்கள் அலுவலகத்தில் கை ஓங்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு இடைஞ்சல் கொடுத்த மேலதிகாரி வேறு இடத்திற்கு செல்லப்போகிறார். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பணவரவையும், பதவி சுகத்தையும் தரப்போகிறார் குரு பகவான் தரப்போகும் குபேர யோகத்தை அனுபவிப்பார்கள்.

மேலும் படிக்க | சிம்ம ராசியில் செவ்வாய்... ஆனால் அந்த ஒரு ராசிக்கு அதிக பலன்கள் - நிலம் வாங்க ஏற்ற நேரம்!

மகரம்: குருபகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகும் காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு எதிலும் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் மிகுந்த ஜாக்கிறட்டையுடன் இருக்க வேண்டும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தாமதமாகும, ஆனால் கிடைத்துவிடும். அலுவலகத்தில் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்யும் நான்கு மாத காலத்தில் வெற்றி கிடைக்கும். 

கும்பம்: கும்பம் ராசிக்காரர்களுக்கு வக்ர குரு பெயர்ச்சி திடீர் செலவுகளை அதிகரிக்கச் செய்வார். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். செல்வ வளம் கூடும் கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். புதிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் இடமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள். 

மீனம்: மீன ராசிக்காரர்கள் எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வேலை செய்யும் இடங்களில் பளு கூடும் என்றாலும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கேற்ற மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த நான்கு மாத காலத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். முக்கியப் பொறுப்புகள் வீடு தேடி வரப்போகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கடகத்திற்கு வரும் புதன்... இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் தூள் பறக்கும் - செல்வம் செழிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News