மேஷம்: இன்று உங்கள் வீட்டைப் புதுப்பிக்க நீங்கள் திட்டமிடலாம், சில கலைப்பொருட்கள் அல்லது உபயோகமான பொருட்களை வாங்கலாம். சொத்துக்கள் மற்றும் பிற சொத்துக்களிலும் முதலீடு இன்று நல்ல நாள். கணவன்-மனைவி உறவு பலப்படும், இது வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உணர்ச்சிபூர்வமான உறவை அதிகரிக்கும். சிங்கிளாக சுற்றும் சிலருக்கு இன்று துணையை கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். காதலிப்பவர்கள் தங்களது திருமணம் குறித்த பெரிய முடிவை இன்று எடுப்பார்கள்.
ரிஷபம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள், நாட்பட்ட உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தை குணப்படுத்த முடியாமல் போகலாம். உங்கள் பணம் எங்காவது மாட்டியிருந்தால் அது இப்போது உங்கள் கைக்கு வரும். இதனால் உங்கள் வணிகத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் சில சலுகைகள் கிடைக்கப்பெறும், இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு உறவினர் அல்லது நண்பரின் உதவியால் வேலை கிடைக்கும்.
மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்
மிதுனம்: இல்லற வாழ்க்கைக்கு இன்றைய நாள் முக்கியமானது, குடும்பம், குழந்தைகளுடன் இன்று பிஸியாக காணப்படுவீர்கள். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் சமூக அந்தஸ்தை மேம்படுத்த வீடு அல்லது அலுவலகத்திற்கு சில ஆக்கப்பூர்வமான பொருட்களை வாங்கலாம். எந்தவொரு வீட்டுப் பொருட்களையும் அல்லது நகைகளையும் வாங்கும் போது நீங்கள் நன்கு யோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்: இன்று நீங்கள் பொறுமையின்றி கொஞ்சம் பதட்டமாக காணப்படுவீர்கள், உங்களின் மனநிலை உங்கள் வேளையில் பிரதிபலிக்கும். சில முட்டாள்தனமான தவறுகளை இன்று நீங்கள் செய்யக்கூடும், இதனால் உங்களுக்கு குறிப்பிட்ட பணியை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். நிலையான சொத்துக்களில் முதலீடுகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் ஒரு பெரியவரின் ஆசீர்வாதத்துடன், குழப்பமான சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். இன்றைய தினம் மாலை நேரத்தில் உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்த தொடங்கலாம்.
சிம்மம்: இன்று நீங்கள் சந்திரனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள், இன்று நீங்கள் அதிக சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை தரும், உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஏதேனும் சின்ன வேலையாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகள் வரக்கூடும். இன்றைய தினம் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை புதுப்பிக்க நீங்கள் திட்டமிடலாம்.
கன்னி: இன்று நீங்கள் வீண் செலவுகளை கட்டுப்படுத்தலாம், இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். உங்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்ட இன்றைய தினம் உங்களுக்கு நல்ல நாள். அலுவலகம் அல்லது வீட்டில் உங்கள் தனிப்பட்ட திறமையை நீங்கள் வெளிக்காட்டலாம். இதனால் உங்களின் சமூக அந்தஸ்து மேம்படக்கூடும். காதலிப்பவர்கள் தங்கள் திருமணத்திற்கு இருவீட்டாரின் ஆதரவு மற்றும் நண்பர்களின் ஆதரவை பெற நேரிடும்.
துலாம்: இன்றைய தினம் உங்களது குழப்பமான மனநிலை மாறி உங்கள் மனநிலை சற்று அமைதியடையும். இன்று நீங்கள் செலவு மற்றும் வருவாயில் சரியான சமநிலையை உருவாக்க முடியும், இதனால் உங்களின் சேமிப்பின் அளவு உயரும். இன்றைய தினம் அதிக பயணம் அல்லது அதிக வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இதனால் உங்களது ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு ஏற்படும். காதலர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும்.
விருச்சிகம்: இன்று உங்களின் உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்களை பொறுமையிழக்கச் செய்யும். உங்கள் மனநிலையை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது, நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் சேமிப்பில் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காதலர்கள் இன்றைய தினம் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது,
தனுசு: இன்று நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கலாம், அவர்கள் உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கு உதவலாம். அந்த செல்வாக்கு மிக்க நபரின் மூலம் உங்களின் அந்தஸ்து சமூகத்தில் உயரக்கூடும். உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்த உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தொழிலில் அதிக மூலதனத்தை முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பொருளாதார தரம் மேம்படும்.
மகரம்: இன்று உங்கள் தாயாரின் உடல்நிலை நன்றாக இருக்கும், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப உங்களுக்கு சில வெகுமதிகள் கிடைக்கப்பெறும். சமூகத்தில் உங்களுக்கு இப்போது செல்வாக்கு உயரத்தொடங்கும், அதிகளவில் வேலை செய்வது சில சமயங்களில் உங்களது சோர்வடையச் செய்யலாம். பணிச்சுமை காரணமாக, நீங்கள் சில குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம்.
கும்பம்: இன்று நீங்கள் வேலையில் திருப்தி அடைவீர்கள், வேலை தொடர்பான குறுகிய பயணத்திற்கு நீங்கள் திட்டமிடலாம். அமைதியான மனநிலையை பெற இன்று நீங்கள் சில புனித தலங்களுக்கு சென்று வரலாம். உங்கள் குருக்கள் உங்களுக்கு சரியான பாதையைக் காட்டுவார்கள், இதனால் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்த தெளிவு உங்களுக்கு பிறக்கும்.
மீனம்: இன்று நீங்கள் சோர்வாக உணரலாம், எனவே உங்கள் மனதை சந்தோஷமாக வைத்திருக்கும் முஉயர்ச்சியில் ஈடுபடுங்கள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்னரும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. உங்கள் பணத்தை மீட்டெடுக்க நீங்கள் பயணம் செய்யலாம், இல்லையெனில் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். சாகசப் பயணங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ