எந்த ராசிக்கு வாரத்தின் எந்த நாள் சிறந்தது? ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் லக்கி நாள் எது?

Lucky Day According To Zodiac Sign: வாரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு நாள் உள்ளது. அந்த ராசிக்காரர்களுக்கு அந்த நாள் மிக உகந்த நாளாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 30, 2022, 05:52 PM IST
  • விருச்சிகம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை புதிய திட்டத்தில் செயல்பட்டால் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்.
  • இந்த நாளில் நீங்கள் உங்கள் புதிய பணிகளை தொடங்கலாம்.
  • ஜோதிட சாஸ்திரப்படி தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வியாழன் அன்று புதிய வேலையை ஆரம்பிக்கலாம்.
எந்த ராசிக்கு வாரத்தின் எந்த நாள் சிறந்தது? ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் லக்கி நாள் எது? title=

ராசிகளின் படி அதிர்ஷ்ட நாட்கள்: சனாதன தர்மத்தில் மங்களத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதன் காரணமாகத்தான் எந்த ஒரு முக்கியமான நல்ல வேலையை செய்வதற்கு முன்னரும் முஹூர்த்தம் பார்க்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, எந்த ஒரு வேலையை செய்தாலும், அதை நல்ல நாளில், நல்ல நேரத்தில் துவக்கினால், அந்த வேலையில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு நபருக்கும் ஏதேனும் ஒரு ராசி இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு நாள் உள்ளது. அந்த ராசிக்காரர்களுக்கு அந்த நாள் மிக உகந்த நாளாக இருக்கும். 

ஒருவர் தனது ராசிக்கு ஏற்றவாறு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து வேலையைத் தொடங்கினால், அந்த வேலையில் கண்டிப்பாக வெற்றி பெறுகிறார். ஆகையால் அனைத்து ராசிக்காரர்களும் தங்களுக்கு எந்த நாள் மிகவும் உகந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 

எந்த ராசிக்கு வாரத்தின் எந்த நாள் ஏற்ற நாள் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்:

கடகம் - திங்கள்

கடக ராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று ஏதேனும் முதலீடு செய்தால் அல்லது முதலீட்டை பயன்படுத்தி தொழில் / வியாபாரம் / ஸ்டார்ட்அப் தொடங்கினால், அது அவர்களுக்கு லாபகரமாக இருக்கும். 

விருச்சிகம் மற்றும் மேஷம் - செவ்வாய்

விருச்சிகம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை புதிய திட்டத்தில் செயல்பட்டால் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும். இந்த நாளில் நீங்கள் உங்கள் புதிய பணிகளை தொடங்கலாம்.

மேலும் படிக்க | 2023 ஆம் ஆண்டின் முதல் வாரம் இந்த ராசிகளின் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும் 

மிதுனம், கன்னி மற்றும் கும்பம் - புதன்

மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை, அலுவலகப் பயணம், தனிப்பட்ட சுற்றுலா போன்றவற்றை புதன்கிழமை திட்டமிடலாம். இந்த நாளில் இவற்றைச் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம்.

தனுசு மற்றும் மீனம் - வியாழன்

ஜோதிட சாஸ்திரப்படி தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வியாழன் அன்று புதிய வேலையை ஆரம்பிக்கலாம். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நாள் மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த நாளில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பலன்களைத் தரும்.

ரிஷபம் மற்றும் துலாம் - வெள்ளி

ரிஷபம் மற்றும் துலா ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை வணிக சந்திப்புகள், மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சாகசப் பயணங்களைத் திட்டமிடலாம். இதனுடன், இந்த நாள் வணிகத்திற்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது.

மகரம் - சனிக்கிழமை

மகர ராசிக்காரர்கள் இந்நாளில் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்தால், அந்த வேலைகள் தடையின்றி நிறைவேறும். இந்த நாளில் மக்கள் புதிய திட்டத்தில் வேலை செய்யலாம். இந்த நாளில் செய்யப்படும் அலுபலகப் பணிகளிலும் அதிக வெற்றி கிடைக்கும்.

சிம்மம் - ஞாயிறு

சிம்ம ராசிக்காரர்கள் வாரம் முழுவதும் திட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த பணிகளை செய்யலாம். இதனால் உங்கள் வேலையில் எந்த இடையூறும் ஏற்படாமல் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துமுடியும். இது தவிர, இந்த நாளில் நீங்கள் புதிய முயற்சிகளை தொடங்கலாம். அவை எந்த வித தடையும் இல்லாமல் நடந்து முடியும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்! '5' ராசிகளின் அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News