புதன் வக்ர பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Budhan Vakra Peyarchi: புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2024, 11:45 AM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் சஞ்சாரம் நல்ல செய்திகளை கொண்டு வரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகமாகும்.
  • பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும்.
புதன் வக்ர பெயர்ச்சி: இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள் title=

Budhan Vakra Peyarchi: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரக பெயர்ச்சிகளின் போது அந்த கிரகங்களுக்கு ஏற்ப ராசிகளில் குறிப்பிட்ட அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 

புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆவார். மே 10ம் தேதி வரை இங்கு இருப்பார். அதன் பிறகு அவர் மீண்டும் மேஷ ராசிக்கு செல்வார். சமீபத்தில்தான் புதன் மேஷ ராசியில் பெயர்ச்சியானார். தற்போது வக்ர நிலையில் நகர்ந்து அவர் மீன ராசிக்கு வந்துள்ளார். மீனத்தில் அவர் நீச்சம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

கும்பம் (Aquarius): 

மீனத்தில் புதனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்கள் அதிக பயன் பெறுவார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த நேரத்தில், நீங்கள் விவேகத்துடனும் பொறுமையுடனும் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். 

தனுசு (Sagittarius): 

தனுசு ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்கக்கூடும். வியாபாரத்தில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு தொல்லைகள் நீங்கி நல்ல காலம் பிறக்கும்

துலாம் (Libra): 

மீன ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களிடம் இருக்கும் கடன் குறைய ஆரம்பிக்கும். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவற்றில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்கள் இப்போது குணமாகும். இடமாற்றம் ஏற்படலாம். பணி இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

சிம்மம் (Leo): 

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் அமைதி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும்.  

மிதுனம் (Gemini) 

மிதுன ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் சஞ்சாரம் நல்ல செய்திகளை கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகமாகும். பண வரவு அதிகமாவதால் நிதி நிலை மேம்படும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமான நடந்து முடியும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். 

ரிஷபம் (Taurus): 

ரிஷப ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதன் பெயர்ச்சி சுப பலன்களை கொண்டு வரும். வேலை நிமித்தமாக பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும், பொற்காலம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News