டிசம்பர் மாதம் இந்த 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்

Horoscope December 2022: பல கிரகங்கள் மற்றும் ராசிகள் டிசம்பர் மாதத்தில் தங்கள் ராசியை மாற்ற உள்ளனர். அதன்படி மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2022, 09:38 AM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையப் போகிறது.
  • மாத தொடக்கத்திலேயே இவர்களுக்கு பல நல்ல செய்திகள் வரும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
டிசம்பர் மாதம் இந்த 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்

டிசம்பர் மாத ராசிபலன் 2022: இன்று முதல் டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளது. டிசம்பருக்குப் பிறகு 2023 புது வருடம் தொடங்கும். டிசம்பர் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படும். பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, 12 ராசிகளும் கிரக மாற்றத்தால் பாதிக்கப்படும். இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும், அதேசமயம் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி இந்த மாதம் பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும், இதனால் அந்த ராசிக்காரர்கள் அவர்களின் துறையிலும் வெற்றி பெறுவார்கள். எனவே இந்த மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. மேஷ ராசி- மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். 

மேலும் படிக்க | டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும் 

2. சிம்ம ராசி- சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மங்களகரமானதாகவும், வெற்றி பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த மாதம் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் நீங்கள் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். திருமணமானவர்களின் வீட்டில் மகிழ்ச்சி கூடும். டிசம்பர் மாதத்தில் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

3. கன்னி ராசி- கன்னி ராசியினருக்கு டிசம்பர் மாதம் வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் கனவுகள் நனவாகும். வீட்டில் மாங்கல்யம் மற்றும் சமய நிகழ்ச்சிகளை நடத்தலாம். மரியாதை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

4. துலாம் ராசி- துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் நல்ல செய்திகளை கொண்டுத் தரும். இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். மரியாதை கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

5. தனுசு ராசி- தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதம் உங்களின் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதார முன்னணியில் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

6. கும்ப ராசி- டிசம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை தரும். இதன் போது நீங்கள் முதலீட்டின் பலனைப் பெறுவீர்கள். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

7. மீன ராசி- மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பெரிய பதவிக்கான பொறுப்பைப் பெறலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News