டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும்

Mercury Transit in December: புதனின் பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிகளுக்கு ஜாக்பாட் மாதமாக இருக்கப்போகிறது. டிசம்பர் முழுவதும் அமோகமான நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2022, 12:02 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரம் மாணவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும் title=

புதன் பெயர்ச்சி டிசம்பர் 2022: செல்வம், புத்திசாலித்தனம், வணிகம், தகவல் தொடர்பு, பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரணியான புதன் கிரகம் டிசம்பர் 3, 2022 அன்று பெயர்ச்சியாக உள்ளது. அன்றைய தினத்தில், தேவகுரு வியாழனுக்கு சொந்தமான தனுசு ராசியில் புதன் நுழைவார். புதனின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் பொருளாதார நிலை, வருமானம், புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பு என பல அம்சங்களை பாதிக்கும். புதனின் ராசி மாற்றம் டிசம்பர் மாத தொடக்கத்தில் நிகழும். இந்த மாற்றத்தின் தாக்கம் 29 டிசம்பர் 2022, அதாவது டிசம்பர் மாதம் முழுவதும் இருக்கும். 

பொதுவாக அனைத்து ராசிகளின் மாற்றமும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிகப்படியான மாற்றங்களை கொண்டு வரும். புதனின் பெயர்ச்சியும் சில ராசிகளுக்கு பல நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கவுள்ளது. புதனின் மாற்றத்தால் டிசம்பர் முழுவதும் அமோகமான நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

டிசம்பரில் புதன் சஞ்சாரத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகள்: 

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பல நல்ல பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசுத் துறையில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த திருமணம் நிச்சயிக்கப்படலாம். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள் 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். குழந்தைகள் மகிழ்ச்சியை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து வேலை செய்யுங்கள். பண வரவு சாதகமாக இருக்கும்.

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு பணம் சேமிக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த ஒரு பெரிய தொகையை இப்போது மீண்டும் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும். வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நல்ல செய்திகளை பெறுவீர்கள். 

துலாம் ராசி: 

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பெரும் பலன்களைத் தரும். பெரிய நிதி ஆதாயம் உண்டாகும். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் இருக்கும். உங்களது பேச்சுத் திறனால் பல பணிகள் நடந்து முடியும். மரியாதை அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலுவான ஆதரவை பெறுவீர்கள்.

மகரம்: 

புதன் சஞ்சாரத்துடன் தொடங்கும் டிசம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு பல வகையில் பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானம் கிடைக்கும். உங்களுக்கு சாதகமாக ஒரு முக்கியமான விஷயம் நடக்கும். காதல் உறவுகள் வலுவாக இருக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் உறவு வலுப்படும். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் உதவி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News