வெள்ளிக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்... சில பலன்களும் சில பரிகாரங்களும்..!!

ஆஷாட மாத சுக்ல பக்ஷ ஷஷ்டி திதியுடன் கூடிய, இந்நாளில் ரவியோகம், சிவயோகம் ஆகியவை இணைந்து வருவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாளை அதாவது ஜூலை 12ம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2024, 07:02 PM IST
  • தங்கள் இலக்குகளை நிர்ணயிப்பதிலும் அவற்றை எளிதாக அடைவதிலும் வெற்றி பெறுவார்கள்.
  • குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
  • லட்சுமி தேவியின் அருளால் அனைத்து காரியங்களும் எளிதாக நிறைவேறும்.
வெள்ளிக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்... சில பலன்களும் சில பரிகாரங்களும்..!! title=

நாளை, ஜூலை 12, வெள்ளிக்கிழமை, சந்திரன் புதனின் ராசியான கன்னி ராசிக்கு மாறப் போகிறார். மேலும் நாளை ஆஷாட மாத சுக்ல பக்ஷ ஷஷ்டி திதியுடன் கூடிய, இந்நாளில் ரவியோகம், சிவயோகம் ஆகியவை இணைந்து வருவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாளை அதாவது ஜூலை 12ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி: ஜூலை 12ம் தேதிக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை அதாவது ஜூலை 12ஆம் தேதி மங்களகரமானதாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால் தங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். தொழில் வல்லுநர்கள் மற்றும் அலுவக பணியில் உள்ளவர்கள் நாளை திறன்மையான பணிக்காக பாராட்டப்படுவார்கள். மாணவர்களுக்கு நாளை மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பாடங்களில் கவனம் செலுத்தி கவனம் செலுத்துவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குடும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கை வலுவாகவும் இருக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கான வெள்ளிக் கிழமை பரிகாரம்: நிதிநிலை உயர மகாலட்சுமி தேவிக்கு ஐந்து செம்பருத்தி மலர்கள் சாற்றி வழிபடவும். 

சிம்ம ராசி: ஜூலை 12ம் தேதிக்கான பலன்கள்

நாளை அதாவது ஜூலை 12ஆம் தேதி சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் தங்கள் பக்கம் இருப்பதால் மனம் தைரியமாக உணருவார்கள். தங்கள் இலக்குகளை நிர்ணயிப்பதிலும் அவற்றை எளிதாக அடைவதிலும் வெற்றி பெறுவார்கள். வணிகத் துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கி லட்சுமி தேவியின் அருளால் கவலைகள் அனைத்தும் நீங்கி அனைத்து காரியங்களும் எளிதாக நிறைவேறும். உங்கள் சமூக வட்டம் அதிகரிக்கும். உங்கள் பேச்சு திறமையால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் புத்திசாலித்தனத்தைப் பார்த்து, எல்லாரும் உங்களிடம் ஆலோசனை கேட்க வருவார்கள்.

சிம்ம ராசிக்கான வெள்ளிக்கிழமை பரிகாரம்: பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமி தேவிக்கு பாயசம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு விநியோகிக்கவும்.

மேலும் படிக்க | செவ்வாய்ப் பெயர்ச்சியால் ஏற்படும் குருமங்கள யோகத்தால் குபேரருக்கு நண்பராகும் 5 ராசிகள்!

கன்னி ராசி: ஜூலை 12ம் தேதிக்கான பலன்கள்

நாளை அதாவது ஜூலை 12ஆம் தேதி கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். மகாலக்ஷ்மி தேவியின் அருளால் நாளை செல்வம் சேரும் வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் பணத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடலாம். சமூகப் பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். ஆமீக காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள், வர்த்தகம் மற்றும் வியாபாரம் புதிய வேகத்தைப் பெறும். வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள அனைவரையும் தங்கள் பணியால் கவருவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளும் நடக்கலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கான வெள்ளிக்கிழமை பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று, 1.25 கிலோ அரிசியை சிவப்பு நிற துணியில் வைத்து, அதனை கையில் வைத்துக் கொண்டு, 'ஓம் ஸ்ரீம் ஷ்ரேயே நமஹ' என்று ஜபித்து, பணத்தை வைத்திருக்கும் இடத்தில் வைக்கவும்.

தனுசு ராசி: ஜூலை 12ம் தேதிக்கான பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு நாளை அதாவது ஜூலை 12ம் தேதி மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் ஆளுமையில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். குடும்பத்தில் உறவு வலுவாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நாளை வேறு சில நிறுவனங்களில் இருந்து நல்ல சலுகை கிடைக்கலாம். பெரிய பதவியும் கிடைக்கலாம். முதலீடு செய்ய விரும்பினால், நாளை அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். மகாலக்ஷ்மி தேவியின் அருளால், திடீரென்று ஒரு பெரிய தொகையைப் பெறலாம். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். காதல் வாழ்க்கையில் நிலவும் தவறான புரிதல்கள் நீங்கி உறவு வலுவாக இருக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கான வெள்ளிக் கிழமை பரிகாரம்: வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட அரச மரத்தின் அடியில் தண்ணீர், சர்க்கரை, பால், நெய் கலந்து மரத்தின் வேரில் ஊற்றி வரவும்.

மீன ராசி: ஜூலை 12ம் தேதிக்கான பலன்கள்

நாளை அதாவது ஜூலை 12ஆம் தேதி மீன ராசிக்காரர்களுக்கு நன்மை நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள், நாளை அது முடியும் வாய்ப்புகள் உண்டு. வணிகத்திற்கான புதிய திட்டங்களை தீட்டலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் தொழில் வேகமாக முன்னேறி பொருளாதார நிலையில் ஸ்திரத்தன்மை இருக்கும். வாழ்க்கையில் புதிய விஷயங்களையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். 

மீனத்திற்கான வெள்ளிக்கிழமை பரிகாரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செல்வம் நிலைத்திருக்க வெள்ளிக்கிழமையன்று வீட்டின் பிரதான வாசலில் நெய்யில் இருமுக தீபம் ஏற்றவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தாம்பத்திய சுகம் முதல் குழந்தை பிறப்பு வரை... சுக்கிரனால் விருத்தியாகும் சுக்கிலம்! வாழவைக்கும் சுக்கிரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News