Madurai Aadheenam, Minister Sekar Babu : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை காவி வேட்டி கட்ட வைத்ததே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார். தண்டபானி தேசிகர் தான் கலைஞர் கருணாநிதியை உருவாக்கினார் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | விஜய் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல்..!
மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசும்போது, "முத்தமிழ் மாநாட்டிற்கு என்னை அழைத்தவர் தீனா மூனா கட்சியை சேர்ந்தவர். தீனா மூனா கட்சியில் இருந்தால் கறை வேஷ்டிதான் கட்டவேண்டும். இதுவரை இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சரிலேயே எல்லாம் கரை வேட்டி கட்டிய அமைச்சரைதான் பார்த்து இருப்போம். அமைச்சர் சேகர்பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார். இது எங்களுக்கு பெரிய வெற்றி. கட்சி கறை வேஷ்டி கட்டியவரை காவி வேஷ்டி கட்ட வைத்தது முத்தமிழ் மாநாடு. அனைவருக்கும் சிறப்பு செய்துள்ளார். தருமை ஆதீனத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர். மகா வித்வான் தண்டபாணி தேசிகர்தான் கலைஞரின் ஆசான்.
ஒரு ஆதீனம் தண்டபாணி தேசிகரை உருவாக்கியது. அவர்தான் கலைஞர் கருணாநிதியை உண்டாக்கினார். தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு அவருக்கு ஒரு பொருட்டல்ல. நடக்கவும் செய்வார், பல்லக்கிலும் ஏறுவார். அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலில் எனக்கு பேச வாய்ப்பு இல்லை, இந்த கோவிலுக்கு கூட குத்தகைதாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது.
கோயில் குத்தகை வழங்காதவர்களிடம் வசூல் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அமைச்சர் சட்டம் என்னும் சாட்டையை எடுத்து சுழற்றி யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களிடமிருந்து கோயில் வழிபாட்டுக்குரிய குத்தகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தால் சேகர்பாபு நம் பாபுவாக இருப்பார்." என்றார். ஆன்மீக பணியில் தமிழ்நாடு அரசு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, "அதை எல்லாம் கேட்காதீங்க இதோட என்னை விட்டு விடுங்கள்" என்று கூறியவாறே நழுவிச் சென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ