செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம்.. செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

Sevvai Peyarchi: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2024, 05:02 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி வரப் பிரசாதமாக இருக்கும்.
  • இந்த காலத்தில் உங்கள் பணியிடத்தில் அதிகப்படியான வெற்றிகளையும் பெறுவீர்கள்.
  • தடைப்பட்டிருந்த பணிகள் நடந்து முடியும்.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம்.. செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் title=

Sevvai Peyarchi: கிரக பெயர்ச்சிகள் ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. 

வீடு, மனை, ஆற்றல், புத்திக்கூர்மை, பராக்கிரமம், வீரம், கல்வி இவற்றின் காரணி கிரகமாக உள்ள செவ்வாய் தனது ராசியை மாற்றி பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் ராசியான கும்ப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி நடந்துள்ளது. 

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும். இத்தனை நாட்களாக இவர்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் சரியாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள்.

மேஷம் (Aries)

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி உண்டாகும். உங்கள் முன்னால் இருந்து வந்த தடைகள் அனைத்தும் இப்பொழுது விலகும். பணியிடத்தில் வெற்றிகள் குவியும். பண வரவு அதிகமாக இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். இப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும். இப்போது செய்யப்படும் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

மிதுனம் (Gemini)

பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது அதிக லாபங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை சீராகும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும். 

சிம்மம் (Leo)

செவ்வாயின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். எந்த பணியை நீங்கள் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆண்டு முழுதும் குபேர யோகம், குரு அருளால் கோடி நன்மை

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பலவித சுப பலன்களை தரும். திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நிச்சயமாகும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும்.  பண வரவு அதிகமாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி வரப் பிரசாதமாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் பணியிடத்தில் அதிகப்படியான வெற்றிகளையும் பெறுவீர்கள். தடைப்பட்டிருந்த பணிகள் நடந்து முடியும். லாபம் அதிகரிக்கும். உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான, அமைதியான சூழல் இருக்கும்

மேலும் படிக்க | Weekly Horoscope: மகாலட்சுமி யோகத்தினால் இந்த வாரம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News