திருப்பதி லட்டு! கோவிலில் தோஷத்தைப் போக்க மகாசாந்தி ஹோமம் வாஸ்து பூஜை பஞ்சகவ்ய ப்ரோக்ஷனை!

Maha Shanthi Homam At Tirupati Temple : புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோவிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2024, 08:48 AM IST
  • பக்திக்காக மட்டுமல்ல அரசியலிலும் முக்கிய இடத்தை பெற்ற திருப்பதி லட்டு!
  • லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம்
  • நெய் கலப்பட உண்மையைக் கண்டறிய விசாரணைக் குழு அமைப்பு
திருப்பதி லட்டு! கோவிலில் தோஷத்தைப் போக்க மகாசாந்தி ஹோமம் வாஸ்து பூஜை பஞ்சகவ்ய ப்ரோக்ஷனை! title=

திருப்பதிக் கோயில்ல் மகாசாந்தி ஹோமம் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. மகா சாந்தி ஹோமம் என்பது உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அமைதியாக வாழ்வதற்காக நடத்தப்படுவதாகும். இந்த யாகம் நடத்தப்படுவதால் நோய்கள், பிரச்சனைகள் சர்ச்சைகளில் இருந்து விடுபடலாம். வளத்துடன் வாழ அவ்வப்போது இதுபோன்ற சாந்தி ஹோமங்கள் நடத்துவது வழக்கமான ஒன்று தான்.

அண்மையில் திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான விளக்கங்களும் என திருப்பதியின் பெயர் விவகாரமான சர்ச்சைகளில் அடிபட்டுவருகிறது. புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக மகாசாந்தி யாகம் நடத்தி கோவிலை புனிதப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படவிருக்கும் இந்த மகா சாந்தி ஹோமத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. காலை 5.40 மணிக்கு தொடங்கிய சாந்தி யாகம் ஸ்ரீவாரி கோயிலில் உள்ள விமானப் பிரகார யாகசாலையில் நடத்தப்படுகிறது. மூன்று ஹோம குண்டங்கள் அமைத்து நடத்தப்படும் இந்த மகா சாந்தி யாகத்தில் 8 குருக்கள் மற்றும் 3 ஆகம ஆலோசகர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். 

அதிகாலை 5.40 மணிக்கு சாத்துமுறையுடன் தொடங்கிய யாகத்தைத் தொடர்ந்து, வாஸ்து ஹோமமும் நடைபெற்றது. அதை அடுத்து கோவிலின் மடப்பள்ளி சமையலறைகள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களை சுத்தம் செய்வது, இயந்திரத்தை சுத்தம் செய்வது என சுத்தீகரிப்பு நடைபெறுகிறது. அதேபோல, ஹோமத்தின் நிறைவில் பஞ்சகவ்ய ப்ரோக்ஷனையும் நடத்தப்பட்டது. 

மேலும் படிக்க | கேதுவும் சூரியனும் கன்னி ராசியில் இணைந்தால் மோசமாக கஷ்டப்படப்போகும் பாவப்பட்ட ராசிகள்!

லட்டு சர்ச்சை

திருப்பதியில் அவ்வப்போது சாந்தி யாகம் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதுவரை இல்லாதது போன்று, இந்த முறை நடத்தப்படும் ஹோமமானது பெருமாளுக்கு படைக்கப்பட்ட லட்டு பிரசாதம் தொடர்பானது என்பதால் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளார். 

இந்த நிலையில் நடைபெற்ற மகாசாந்தி ஹோமம் முக்கியமானது. ஏனென்றால், திருப்பதி ஏழுமலையானை தரிச்சிக்க வருபவர்கள் லட்டு  பிரசாதம் வாங்கிச் செல்வது காலங்காலமாக தொடரும் நடைமுறை. அந்த பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாகவும் இன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டு பக்தர்களின் நம்பிக்கையை குலைத்துள்ளது.

இதுவரை முறைகேடுகள் என எத்தனை பேர் எவ்வளவு குற்றச்சாட்டுக்களை சொல்லியிருந்தாலும், இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. பக்தர்களின் நம்பிக்கைகளை இழக்கப்போவது, குற்றம் சாட்டும் இந்நாள் முதலமைச்சரா இல்லை, இதற்கு முன் திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் இருந்த அதிகாரிகளா என்பது நிச்சயம் தெரியவரும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இதனிடையில், திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாக மாறியிருக்கும் நிலையில், ஆந்திரப்பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண், 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கிவிட்டார்.தவறு செய்திருப்பது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏழுமலையானின் பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதேபோல, அரசியல் நோக்கத்திற்காக திருப்பதி பெருமாளின் பெயரை பயன்படுத்தியிருந்தால் அதற்கான பலனை வெங்கடாசலபதி கொடுத்துவிடுவார் என்றும் பக்தர்கள் பெருமாளின் மீது பாரத்தை போட்டுவிட்டார்கள். 

மேலும் படிக்க | திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை என்ன? ஏழுமலையானே பார்த்துக் கொள்வார்! நாளை மகாசாந்தி ஹோமம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News