சனி உதயம்: இந்த ராசிகளுக்கு அதிரடி அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி, உங்க ராசி என்ன?

Shani Uday 2023: சனி உதயமானவுடன் நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். சனி உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2023, 12:02 PM IST
  • சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி ஆவார்.
  • தற்போது சனிபகவான் அஸ்தமன நிலையில் உள்ளார்.
  • சனி பகவானின் உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகபட்சமான பலன்கள் கிடைக்கும்.
சனி உதயம்: இந்த ராசிகளுக்கு அதிரடி அதிர்ஷ்டம், சரவெடி வெற்றி, உங்க ராசி என்ன? title=

சனி பகவானின் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். அவர் மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார். எந்த வித பாரபட்சமுமின்றி, நல்ல செய்கைகளுக்கு நல்ல பலன்களையும் தீய செயல்களுக்கு அதற்கேற்ற பலன்களையும் சனி பகவான் கொடுக்கிறார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கிறார். பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை மக்களுக்கு உகந்ததாக கருதப்படுவதில்லை. சனியின் அஸ்தமன நிலையும் அத்தனை உகந்தது அல்ல. எனினும், சனி சிறிது காலத்திற்கு தான் இந்த நிலையில் இருப்பார்.

ஜனவரி 31, 2023 இல் அஸ்தமனமான சனி பகவான், பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 6, 2023 அன்று ஹோலி பண்டிகைக்கு முன்னர் உதயமாவார். சனி உதயமானவுடன் நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். சனி உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: 

ஜோதிடர்களின் கூற்றுப்படி, கடின உழைப்பாளிகளாக இருந்து, முழு முனைப்புடன் தங்கள் பணிகளை செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் சாதகமாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைப்பட்டிருந்த பணிகள் தொடரும். அவை வெற்றிகரமாக முடிவடையும். 

சனி உதயத்தால் பண ஆதாயமும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கு சனியுடன் நட்புறவு இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் தொடங்கும் வேலையில் வெற்றி பெறுவார்கள்.

சிம்மம்: 

ஜோதிடத்தின்படி, சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சனி பகவானுக்கும் சூரியனுக்கும் தந்தை-மகன் உறவு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆகையால், சனியின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை ஏற்படுத்தும். சூரியன் ஆன்மாவுக்கும் மரியாதைக்கும் காரணியாகக் கருதப்படுவதால், சனியின் உதயத்தால், கடின உழைப்புடன் தங்கள் வேலையைச் செய்யும் சிம்ம ராசிக்காரர்கள், நீதியின் பாதையில் நிலைத்திருப்பார்கள். சனியின் ஆதரவைப் பெறுவார்கள்.

சனியின் உதயத்துக்குப் பிறகு சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பணவரவு அதிகரிக்கும். கடனில் இருந்து விடுபட்டு பொருளாதார நிலை வலுப்பெறும். இந்த நேரத்தில் உங்களுக்கு இருந்துவந்த உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக குணமாகும்.

மேலும் படிக்க | Mercury Transit Feb 27: நாலு பேர் போற்ற வாழும் ராசிகள்! புதன் பெயர்ச்சியால் நிம்மதியாகும் 4 ராசிகள்

துலாம்: 

ரிஷபம் ராசியைப் போலவே, துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன் கிரகம்தான். இது மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகும். சுக்கிரனுக்கும் சனிக்கும் நட்பு உண்டு. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் எப்போதும் அருள்பாலிக்கிறார். 

சனியின் உதயத்தால், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரத் தொடங்கும். அவர்கள் நினைத்த காரியங்களை செய்ய எந்த தடையும் இருக்காது. துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு பலன் கிடைக்கும். அதை மேலும் அதிகரிக்க தினமும் சனி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

கும்பம்: 

சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி ஆவார். தற்போது சனிபகவான்அஸ்தமன நிலையில் உள்ளார். சனி பகவானின் உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிகபட்சமான பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மகத்தான ஆதரவு கிடைக்கும். சிறிதளவு கடின உழைப்பு இருந்தாலும், அதிக அளவிலான பலன்கள் கிடைக்கும். 

இந்த காலத்தில் செலவுகள் அதிகரித்தாலும், வருமானம் அதிகரிப்பதால் செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள். முன்னர் முதலீடு செய்திருந்ததன் பலன் தற்போது கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். இதனால் ஆரோக்கியமும் மேம்படும். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் தோத்திரங்களை துதிப்பது நல்ல பலன் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News