10 நாட்களில் புதன் பெயர்ச்சி, இந்த 4 ராசிகளுக்கு பண வரவு.. லாபமோ லாபம்

Budh Rashi Parivartan 2023: அசுபமாக கருதப்படும் புதன் ஜூன் 24 ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறார். இந்த பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை வீசும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 07:41 AM IST
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.
  • திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
  • பதவி உயர்வு மூலம் புதிய பொறுப்புகளை பெறலாம்.
10 நாட்களில் புதன் பெயர்ச்சி,  இந்த 4 ராசிகளுக்கு பண வரவு.. லாபமோ லாபம் title=

ஜூன் 2023 மிதுனத்தில் புதன் பெயர்ச்சி: வேத சாஸ்திரங்களில், புதன் 'கிரகங்களின் இளவரசன்' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக புதன் தர்க்கம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். அந்தவகையில் ஒவ்வொரு முறையும் புதன் அதன் ராசியை மாற்றும் போதெல்லாம், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும், அவர்களின் மூடி இருந்து கதவுகளைத் திறக்கும் என்பார்கள். அந்தவகையில் தற்போது புதன் கிரகம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி அதாவது இன்னும் 10 நாட்களில் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இவரின் இந்த பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மாதம் முழுவதும் செல்வ மழை பொழியும். அதேபோல் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவார்கள். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம்.

மேஷம்
இந்த புதனின் பெயர்ச்சி (Budh Gochar 2023) புதிய நபர்களுடன் உங்கள் நட்பை அதிகரிக்கும். உங்கள் தகவல் தொடர்புத் திறனின் பலத்தால் வாழ்க்கையில் முக்கியமான வெற்றிகளை அடைய முடியும். தொழில் சம்பந்தமாக சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியுடனான உறவு இனிமையாக இருக்கும். பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களே...வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு அதிரடி மாற்றம், பணமழை பொழியும்

மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம் (Budh Rashi Parivartan 2023) ஆகும். இப்போது புதன் தனது சொந்த ராசியிலேயே பயணிக்கப் போகிறார். இதன் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சி வணிகத்திற்கு நன்றாக இருக்கும். புதிய துறையில் முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி (Budh Gochar 2023) முழு பலனை தருவார். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளுடனான உங்கள் உறவு சுமூகமாக இருக்கும், இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் புதிய பொறுப்புகளைப் பெறலாம் மற்றும் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கலாம். சமூக வலைதளங்களில் முன்பை விட சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் செறிவு அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பெறலாம்.

தனுசு
மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி (Budh Rashi Parivartan 2023) தனுசு ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் இருக்கும். இதனால் புதன் பெயர்ச்சி தாக்கத்தால், தனுசு ராசிக்காரர்களின் வணிகம் இரவும் பகலும் நான்கு மடங்கு முன்னேறும். பல புதிய கூட்டாளர்கள் தனுசு ராசிக்காரர்களுடன் வணிகத்தில் ஒருக்கணித்து சேரலாம். நீங்கள் பல புதிய பகுதிகளில் முதலீடு செய்யலாம். இந்த பெயர்ச்சி காலம் வேலை செய்பவர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். அத்துடன் நீங்கள் நினைத்த பதவி உயர்வு கிடைப்பதுடன், பல புதிய பொறுப்புகலையும் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ரத்தால் சூப்பர் டூப்பர் குபேர ராஜயோகம்..! 4 மாதங்களுக்கு பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News