சனியின் இயக்கத்தால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: லாபம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும்

Saturn Transit: சனி பகவான் இந்த ராசிகள் மீது பண மழை பொழியவுள்ளார். சனி பகவானின் நேரான இயக்கத்தால் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 9, 2022, 10:59 AM IST
  • மேஷ ராசிக்காரர்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
  • அலுவலகத்தில் அவர்களது பணி பாராட்டப்படும்.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
சனியின் இயக்கத்தால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: லாபம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும் title=

மகர ராசியில் சனி பகவானின் மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது பிற்போக்கு இயக்கத்திலும் அதாவது வக்ரமாகவும், பின்னர் நேரான இயக்கத்திலும் அதாவது மார்கியாகவும் நகரும். சனி பகவான் அக்டோபர் 23 முதல் மகர ராசியில் மார்கியாவார், அதாவது மகர ராசியில் நேரான நகர்வில் இயங்குவார். ஜூலை முதல் மகர ராசியில் சனி பகவான் வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு நிலையில் உள்ளார். அக்டோபரில் சனிபகவானின் நிலை மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். எனினும், சில ராசிகளில் அதிகப்படியான பலன்களை அள்ளித்தருவார் சனி பகவான். இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் இப்போது பிரகாசிக்கும். சனியின் இயக்கத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். தடைபட்டிருந்த அனைத்து வேலைகளும் தொடங்கும்.

மேஷம்: 

மேஷ ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் சனி மார்கியாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜோதிடத்தில், இந்த வீடு தொழில் மற்றும் வேலைக்கான ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இக்காலத்தில் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் அதிக லாபம் அடைவார்கள். புதிய வியாபார ஒப்பந்தம் ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் வியாபாரம் விரிவடையும்.

மேஷ ராசிக்காரர்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் அவர்களது பணி பாராட்டப்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | Kethu Transit: துலாம் ராசியில் கேது; இழப்புகளை சந்திக்க போகும் ‘3’ ராசிகள்! 

மீனம்: 

மீன ராசியில் இருந்து 11ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். ஜோதிடத்தில் இந்த வீடு வருமானம் மற்றும் லாபம் தரும் இடமாக கருதப்படுகிறது. மீன ராசியினரின் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும். இந்த காலகட்டத்தில், புதிய வியாபார ஒப்பந்தங்களால் வியாபாரத்தில் விரிவாக்கத்துடன் லாபமும் அதிகரிக்கும். சனி பகவான் மற்றும் குரு பகவானுடன் தொடர்புடைய வியாபாரம் அல்லது வேலையில் உள்ளவர்களுக்கு குறிப்பாக இந்த காலத்தில் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களின் சனிப்பெயர்ச்சி ஜாதகத்தில் இருந்து இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். அது பணம் மற்றும் பேச்சாற்றலுக்கான ஸ்தானகாக கருதப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரம் காரணமாக பங்குச்சந்தை மற்றும் லாட்டரியுடன் தொடர்புடைய தனுசு ராசிக்காரர்களுக்கு அதிகபடியான பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளால் மனதில் அமைதியும் மதிப்பும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | அனந்த சதுர்தசி விரதத்தின் நதிமூலம் ரிஷிமூலம் மற்றும் பலன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News