புதன் பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Mercury Transit: மீனத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2024, 11:36 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை கொண்டு வரும்.
  • நீண்ட நாட்களாக ஓரிடத்தில் சிக்கி இருந்த பணம் இப்பொழுது மீண்டும் கிடைக்கும்.
  • உங்களை தாழ்வு படுத்தி பேசியவர்கள் இப்பொழுது தாமாக உங்களுக்கு உதவி புரிய வருவார்கள்.
புதன் பெயர்ச்சி: இன்னும் 4 நாட்களில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள் title=

Mercury Transit: மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற உள்ளன. முதல் பெயர்ச்சியாக கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் தன்னுடைய ராசியை மாற்ற உள்ளார். புத்தி கூர்மை, பேச்சாற்றல், அறிவாற்றல், இசை, கலை ஆகியவற்றின் காரணி கிரமாவார் புதன். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றுகிறார்.

வரும் ஏழாம் தேதி காலை புதன் கிரகம் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். இவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார்.

மீனத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொங்கும். நிதிநிலை மேம்படும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடகம் (Cancer)

புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனைத்து ராசிகளையும் விட அதிக அளவில் நன்மை அளிக்கும். பலவித வெற்றிகளை கொண்டுவரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் அனைவரது பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் வேலையை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் நிதிநிலை நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். புதன் பெயர்ச்சி காலம் உங்களுக்கு நிதி ரீதியாக அதிக லாபத்தையும் சிறந்த வாய்ப்புகளையும் கொண்டு வரும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை கொண்டு வரும். நீண்ட நாட்களாக ஓரிடத்தில் சிக்கி இருந்த பணம் இப்பொழுது மீண்டும் கிடைக்கும். உங்களை தாழ்வு படுத்தி பேசியவர்கள் இப்பொழுது தாமாக உங்களுக்கு உதவி புரிய வருவார்கள். உங்களுடைய பேச்சாற்றலால் சிக்கலான சூழல்களையும் வெற்றிகரமாக கையாள்வீர்கள். திருமணமாகாத சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்: அட்டகாசமாய் வாழவைப்பார் குரு

விருச்சிகம் (SCorpio)

சட்ட சிக்கல்களில் இப்பொழுது நிவாரணம் கிடைக்கும். தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வெளிநாடுகளில் வேலைக்காகவோ அல்லது குடியுரிமைக்காகவோ விண்ணப்பித்திருந்தால் அதில் இப்பொழுது நல்ல செய்தி வரும். உங்கள் ஆற்றல் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

தனுசு (Sagittarius)

புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் உங்கள் வாழ்க்கையில் காணலாம். லாபத்திற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையின் காரணமாக உங்களை பாராட்டுவார்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சாற்றலால் உங்கள் பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். முதலீடுகளில் லாபம் கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து போகும். மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகள் மீது சனி அருள்..... ராஜவாழ்க்கை, பணக்கார யோகம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News