சனி உதயம்: இந்த ராசிளுக்கு வேலையில் டென்ஷன், குடும்பத்தில் குழப்பம்...மொத்தத்தில் நேரம் சரியில்லை

Shani Uday in March 2023: சனியின் உதயம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்களை கொண்டு வரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2023, 10:53 AM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது வியாபாரத்தில் அதிர்ஷ்டம் ஆதரிக்காது.
  • இதன் காரணமாக நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
  • உங்கள் மனைவியுடன் சரியான முறையில் பழகுங்கள், இல்லையெனில் உறவு கெட்டுவிடும்.
சனி உதயம்: இந்த ராசிளுக்கு வேலையில் டென்ஷன், குடும்பத்தில் குழப்பம்...மொத்தத்தில் நேரம் சரியில்லை title=

சனி உதயம் மார்ச் 2023: மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அஸ்தமன நிலையில் இருக்கும் அவர், ஹோலி பண்டிகைக்கு முன்னர் உதயமாவார். மார்ச் 05, ஞாயிற்றுக்கிழமை அன்று சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதிக்கப் போகிறார். சனி பகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், இந்த நிகழ்வு 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

சனியின் உதயம் இந்த ராசிக்காரர்களின் தொழில், ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். இந்த காலத்தில் இவர்கள் தங்கள் பேச்சிலும் நடத்தையிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து சவால்களை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். ஜனவரி 30 ஆம் தேதி சனி கும்பத்தில் அஸ்தமித்தார். 

ஹோலிக்கு முன் சனியின் உதயம் ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்களை கொண்டு வரப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் உருவாகும் பதற்றம் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழிலில் உருவாகும் அழுத்தங்களை சரியாக கையாள வேண்டும். இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் ஏற்படும் பாதகமான பலன்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சனி உதயத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்கவுள்ள ராசிகள்:

ரிஷபம்: 

சனியின் உதயத்தால் உத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரக்கூடும். முதலாளி அல்லது நிறுவனம் உங்களுக்கு வேலை அழுத்தத்தை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் நம்பிக்கையும் பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மன அழுத்தத்தை நீக்க யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும். இப்போது லாபம் காண்பதற்கான சூழல் இல்லை என்பதால் முதலீட்டைத் தவிர்க்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், நீங்கள் ஏமாற்றப்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மேலும் படிக்க | Budhaditya Rajayogam: புதாதித்ய யோகத்தால் ஆபரணம் நகை வாங்கும் யோகம் 3 ராசிக்காரர்களே

கன்னி: 

சனியின் உதயத்தால் உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரலாம். இந்த சூழ்நிலையில் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும். ஊதாரித்தனமாக செலவு செய்தால், உங்கள் நிதி நிலை மோசமடையலாம். ஆகையால் தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள். கடன் வாங்கும் நிலைமை வரலாம். அதிகரிக்கும் வேலை அழுத்தம் ஆரோக்கியத்தை கெடுக்கும். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். பேச்சில் நிதானம் இருக்க வேண்டும், இல்லையெனில் அது விவாதத்தை உருவாக்கும்.

விருச்சிகம்: 

வேலை அல்லது வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்காது. இதன் காரணமாக நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவியுடன் சரியான முறையில் பழகுங்கள், இல்லையெனில் உறவு கெட்டுவிடும். சக ஊழியர்களால் ஏற்படும் சிரமங்களால் மனம் வருத்தமாக இருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: 

சனியின் உதயத்தால் குடும்பத்தில் சொத்துக்களில் தகராறு ஏற்படலாம். சகோதர, சகோதரி உறவில் பாதிப்பு ஏற்படும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தையும் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உணவில் அலட்சியத்தால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் நேரம் கடினமாக இருக்கும், இது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கலாம். அமைதியுடனும் நிதானத்துடனும் பணியாற்றுங்கள்.

மீனம்: 

கூட்டுத் தொழில் செய்யும் மீன ராசிக்காரர்கள் உங்கள் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் வியாபாரம் பாதிக்கப்படலாம். இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் காதல் உறவில் இருந்தால் அல்லது திருமணமானவராக இருந்தால், உங்கள் காதல் / வாழ்க்கைத் துணையுடன் சரியான நடத்தை மற்றும் பேச்சு இருக்க வேண்டும். தவறான விஷயங்கள் உறவைக் கெடுக்கும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News