செப்டம்பர் கிரக பெயர்ச்சிகள்.. செல்வம் பெருகும்..இந்த ரசிகளுக்கு ஜாக்பாட்

September Grah Gochar 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பல பெரிய கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றுகின்றன. செப்டம்பர் 2023 இல், 5 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 21, 2023, 09:31 PM IST
  • இந்த நேரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த மாதம் அனுகூலமானதாக இருக்கும்.
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், பலன் தருவதாகவும் இருக்கும்.
செப்டம்பர் கிரக பெயர்ச்சிகள்.. செல்வம் பெருகும்..இந்த ரசிகளுக்கு ஜாக்பாட் title=

செப்டம்பர் மாத கிரக மாற்றங்கள் பலன்கள் 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு மாதமும் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. தற்போது செப்டம்பர் மாதம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஐந்து பெரிய கிரகங்கள் பெயர்ச்சி அடையப் போகின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் / பெயர்ச்சியால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சில கிரகங்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தக் கூடும். அதேபோல் ஒவ்வொரு நபரும் வரவிருக்கும் மாதம் அவருகளுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவளுடம் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் எந்தெந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன, மேலும் இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் (செப்டம்பர் மாதம்) திடீர்ப் பணம் வரப் போகிறது என்பதை அறிந்துக்கொள்வோம்.

இந்த கிரகங்கள் செப்டம்பரில் பெயர்ச்சியாக இருக்கிறது
செப்டம்பர் 04 ஆம் தேதி 2023: கடக ராசியில் (Cancer) சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit) அடைகிறார்.

செப்டம்பர் 04 ஆம் தேதி 2023: மேஷ ராசியில் (Aries) குரு வக்ர பெயர்ச்சி (Jupiter Retrograde) அடைகிறார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி 2023: சிம்ம ராசியில் (Leo) புதன் பெயர்ச்சி (Mercury Transit) நடக்கவிருக்கிறது.

செப்டம்பர் 17 ஆம் தேதி 2023: கன்னி ராசியில் (Virgo) சூரியனின் பெயர்ச்சி (Sun Transit) நடக்கவிருக்கிறது.

24 செப்டம்பர் 2023: கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனமாகிறது (Mars Ast).

மேலும் படிக்க | குருவோட கைகோர்த்த குபேரன்.. செல்வ மழையில் நனைய போகும் ராசிகள் இவையே

இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அற்புதமாக இருக்கும் 

மேஷ ராசி (Aries Zodiac Sign)
ஜோதிட சாஸ்திரப்படி, செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், பலன் தருவதாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் அதிகரிக்கும். இதன் போது, ​​வங்கி இருப்பு மிகப்பெரிய அளவில் உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் ராசி (Libra Zodiac Sign)
துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த (செப்டம்பர்) மாதம் அனுகூலமானதாக இருக்கும். இந்த நேரத்தில் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். காதல் விவகாரங்களில் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் மங்களகரமானதாக இருக்கும்.

மகர ராசி (Capricon Zodiac Sign)
ஜோதிடத்தின் படி, இந்த நேரம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் திடீர் பண ஆதாயம் உங்களுக்கு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். பேச்சால் மற்றவரின் மனதை வெல்ல முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜாக்பாட் வாழ்க்கை, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News